/indian-express-tamil/media/media_files/2025/11/04/tn-public-exam-time-table-2026-10th-12th-exam-dates-tn-10th-result-date-11th-arrear-exam-date-anbil-mahesh-2025-11-04-12-20-39.jpg)
Tamil Nadu SSLC, Plus Two Time Tables 2026 Out
தமிழ்நாட்டில் இந்த கல்வியாண்டு முதல் 11ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நிகழ் கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (நவம்பர் 4, 2025) வெளியிட்டார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில், முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டத்துக்குப் பிறகு அவர் இந்த அட்டவணையை வெளியிட்டார்.
அப்போது, 11ஆம் வகுப்பு அரியர் தேர்வுகளுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டது. தேர்வுகளின் தேதி, விடுமுறைகள் குறித்து அறிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ், மேலும் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
பொதுத் தேர்வு தேதிகள் மற்றும் முடிவுகள்
அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின்படி, 10, 12ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு அரியர் தேர்வுகளின் விவரங்கள்:
12 ஆம் வகுப்பு:
தேர்வு தொடக்கம்: மார்ச் 2, 2026
தேர்வு நிறைவு: மார்ச் 26, 2026
செய்முறைத் தேர்வு: பிப். 9 முதல் பிப். 14 வரை
தேர்வு முடிவு (உத்தேசமாக): மே 8, 2026
10 ஆம் வகுப்பு:
தேர்வு தொடக்கம்: மார்ச் 11, 2026
தேர்வு நிறைவு: ஏப்ரல் 6, 2026
செய்முறைத் தேர்வு: பிப். 23 முதல் பிப். 28 வரை
தேர்வு முடிவு (உத்தேசமாக): மே 20, 2026
11 ஆம் வகுப்பு (அரியர்):
தேர்வு தொடக்கம்: மார்ச் 3, 2026
தேர்வு நிறைவு: மார்ச் 27, 2026
செய்முறைத் தேர்வு: பிப். 16 முதல் பிப். 21 வரை
தேர்வு முடிவு (உத்தேசமாக): மே 20, 2026
”ஏப்ரல் 6ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. மாநிலத் தேர்தல் ஆணையத்துடன் (State Election Commission) கலந்து ஆலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்துள்ளோம். ஒவ்வொரு தேர்விற்கும் இடையே மாணவர்களுக்கு மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை சுமார் 8 லட்சத்து 7 ஆயிரம் மாணவர்களும், 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை சுமார் 8 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்களும் எழுதவுள்ளனர்.
முதன்முறையாக, 12 ஆம் வகுப்பு கணக்குத் தேர்வுக்கு (Accountancy) கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது மாணவர்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று எடுக்கப்பட்ட முடிவாகும்.
ஒவ்வொரு தேர்விற்கும் இடையே மாணவர்களின் படிப்புத் திட்டமிடலுக்கு வசதியாக மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைகள்:
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் கூடுதல் நேரம், மொழிப் பாடத்துக்கு விலக்கு, தரைமட்ட வகுப்பறையில் தேர்வு எழுதும் அனுமதி, மற்றும் லேப்டாப் மூலம் தேர்வு எழுதும் அனுமதி ஆகியவை இந்த ஆண்டும் தொடரும்.
அமைச்சரின் அறிவுரை:
"தேதி அறிவிக்கப்பட்டதால் பதற்றமடையாமல், இது இன்னொரு தேர்வுதான் என்ற உற்சாகத்தோடு படிக்கத் தொடங்குங்கள். சரியான தூக்கம், ஓய்வு மற்றும் நேர மேலாண்மையுடன் படியுங்கள். சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவுபடுத்துங்கள்.
இது எனக்கும் (பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்) அரசாங்கத்திற்கும் ஒரு தேர்வுதான். 38 மாவட்டங்களுக்கும் சென்று ஆசிரியர்களின் கருத்துக்களைக் கேட்டிருப்பதால், இந்த முறை பொதுத் தேர்வு முடிவுகள் அதிகப்படியாகக் கூடும் என்று நம்புகிறேன்.
விழிப்புணர்வுத் திட்டங்களால் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் மாணவர்கள் தேர்வில் ஆப்சென்ட் ஆவது குறைந்துள்ளது. இந்த முறையும் அதிக மாணவர்கள் ஆப்சென்ட் ஆகாமல் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது”, என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us