TN TET Notification: ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியமான டி.ஆர்.பி, மூலம் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை (டெட்) தமிழக அரசு நடத்தி வருகிறது. இந்தத் தேர்வின் மூலம் 1 முதல் 8-ம் வகுப்பு வரைக்குமான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் trb.tn.nic.in. என்ற தளத்தில் விண்ணப்பிக்கவும்.
முக்கிய தேதிகள்
அறிவிப்பு வெளியான தேதி - பிப்ரவரி 28, 2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள் - மார்ச் 15, 2019
ஆன்லைனில் விண்ணபிக்க இறுதி நாள் - ஏப்ரல் 5, 2019
முதல் மற்றும் இரண்டாம் தாளுக்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பதாரர்கள் www.trb.tn.nic. என்ற தளத்தை விசிட் செய்து, தாள் ஒன்று மற்றும் இரண்டுக்கு தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து, கட்டாயம் பதிவேற்றம் செய்துக் கொள்ள வேண்டும்.
புகைப்படம், கையொப்பம் இல்லாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
மெயில் ஐ.டி, மொபைல் எண் கட்டாயம் தேவை. மெயில் ஐ.டி அடிக்கடி உபயோகத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
விண்ணப்பத்தில் கேட்டிருக்கும் விஷயங்கள் ஒன்று விடாமல், விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்துக் கொள்ள வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
விண்ணப்பக் கட்டணம்
பொதுப்பிரிவினருக்கு ரூ.500, எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.250.
இது குறித்த மேலும் தகவல்களுக்கு, www.trb.tn.nic தளத்தை அணுகவும்.