10-வது படித்தவர்களுக்கு அரசு வேலை: திருவாரூரில் 139 கிராம உதவியாளர் காலிப் பணியிடங்கள்- விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

விண்ணப்பப் படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களுடன் இணைத்து, சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் (Tahsildar) நேரில் அல்லது அஞ்சல் மூலமாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களுடன் இணைத்து, சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் (Tahsildar) நேரில் அல்லது அஞ்சல் மூலமாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

author-image
abhisudha
New Update
TN Govt jobs

TN Revenue Jobs Thiruvarur Village Assistant Recruitment 2025 Thiruvarur Govt Jobs Thiruvarur Village Assistant 139 Posts

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் (Thiruvarur Revenue and Disaster Management Dept) காலியாக உள்ள 139 கிராம உதவியாளர் (Village Assistant ) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

Advertisment

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப் பணிக்கு அக்டோபர் 11, 2025 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மொழித் திறன்: தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

வசிப்பிடம்: விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட வட்டத்தைச் (Taluk) சேர்ந்த நிரந்தர குடியிருப்பாளராக இருக்க வேண்டும். காலியிடம் உள்ள கிராமத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு (01.07.2025 நிலவரப்படி):

பொதுப் பிரிவினர்: 21 முதல் 32 ஆண்டுகள்

பி.சி./ எம்.பி.சி/ பி.சி.எம் பிரிவினர்: 21 முதல் 39 ஆண்டுகள்

எஸ்.சி/ எஸ்.ஏ/ எஸ்.டி/ பி.டபிள்யூ.டி பிரிவினர்: 21 முதல் 42 ஆண்டுகள் வரை

Advertisment
Advertisements

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

சம்பளம்: நிலை 06-ன் படி, ரூ.11,100 – ரூ.35,100/- வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப் படிவத்தை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான **https://Thiruvarur.nic.in/**-இல் இருந்து பி.டிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களுடன் இணைத்து, சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் (Tahsildar) நேரில் அல்லது அஞ்சல் மூலமாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.10.2025 (மாலை 5.45 மணி வரை).

மேலும் விவரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்ய இணையதளத்தைப் பார்க்கவும். இது ஒரு நிரந்தர அரசுப் பணி என்பதால், தகுதியுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tamil Nadu Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: