/indian-express-tamil/media/media_files/2025/10/13/single-teacher-schools-india-moe-data-2025-10-13-19-32-12.jpg)
TN schools October 25 Saturday working day| Diwali holiday compensation
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, நாளை சனிக்கிழமை (அக்டோபர் 25) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளும் முழுநேரம் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு, தீபாவளி பண்டிகை அக்டோபர் 20, திங்கட்கிழமை அன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதற்கு முன்னதாக, அக்டோபர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையாக அமைந்ததால், ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்குத் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்தது.
பொதுமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, பயண நெரிசலைத் தவிர்க்கும் வகையில், பண்டிகைக்கு அடுத்த நாளான அக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை அன்றும் பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இந்தச் சிறப்பு விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், அக்டோபர் 25, சனிக்கிழமை அன்று அனைத்து அரசு, தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மாநகராட்சிப் பள்ளிகள் அனைத்தும் பணி நாளாகச் செயல்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகள் அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில், "நாளை (அக்டோபர் 25) பள்ளிகள் வழக்கம் போல் முழுநேரம் செயல்படும். மேலும், அக்டோபர் 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமைக்குரிய பாடத்திட்ட அட்டவணைப்படி வகுப்புகள் நடைபெறும்" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி பள்ளிகளுக்கும் அறிவிப்பு
இதேபோன்று, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் விடுமுறை ஈடுசெய்யும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு, கடந்த அக்டோபர் 3ஆம் தேதி ஒரு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை ஈடு செய்யும் வகையில், நாளை (அக்டோபர் 25) அனைத்துப் பள்ளிகளும் (அரசு, நிதியுதவி மற்றும் தனியார்) ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை வழக்கம் போல் இயங்கும் என்றும், அன்றைய தினம் வெள்ளிக்கிழமைக்குரிய அட்டவணைப்படி வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த அறிவிப்பைக் கருத்தில் கொண்டு நாளை பள்ளிக்குச் செல்லத் தயாராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us