Advertisment

TNEA 2023: என்ஜினீயரிங் அட்மிஷன் ரவுண்ட் 2 கவுன்சலிங் இன்று தொடக்கம்; இந்த தேதி வரை சாய்ஸ் ஃபில்லிங் அவகாசம்!

பொறியியல் படிப்பில் சேருவதற்கான 2-ம் சுற்று கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
counselling

கலந்தாய்வு (பிரதிநிதித்துவ படம்)

தமிழ்நாட்டில் படிப்பில் சேருவதற்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) 2023, இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வு இன்று (ஆகஸ்ட் 9) தொடங்குகிறது. இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் 11-ம் தேதி வரை சாய்ஸ் ஃபில்லிங் செய்யலாம். வரும் 13-ம் தேதி கல்லூரிகளை தேர்ந்தெடுத்ததற்கான ஒதுக்கீட்டு உத்தரவுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் http://tneaonline.org என்ற இணையதளத்தில் கல்லூரிகளை தேர்வு செய்யலாம்.

Advertisment

11-ம் தேதி மாலை 5 மணி வரை சாய்ஸ் ஃபில்லிங் செய்ய ஆன்லைனில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்ந்தெடுத்த "Accept and join", "Accept and upward" இரண்டு ஆப்ஷன்களுக்குமான பட்டியலில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியிடப்படும்.

2-ம் சுற்றி கலந்தாய்விக்கான முடிவுகள் tneaonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆகஸ்ட் 13-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Engineering Counselling Tn Engineering Admissions
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment