TNEA Engineering counselling first round choice filling tips in Tamil: தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சாய்ஸ் ஃபில்லிங் குறித்த முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்காக பொது கலந்தாய்வு செயல்முறை இன்று (செப்டம்பர் 10) தொடங்குகிறது. முதற்கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 10, 11 மற்றும் 12 ஆகிய 3 நாட்கள் சாய்ஸ் ஃபில்லிங்கிற்கு வழங்கப்படும்.
பொறியியல் கவுன்சலிங்கில் மிக முக்கியமான செயல்முறை இந்த சாய்ஸ் ஃபில்லிங் தான். இதுதான் நமது எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய பாடப்பிரிவு மற்றும் கல்லூரியை தேர்வு செய்கிறது. இந்த சாய்ஸ் ஃபில்லிங் செயல்முறைக்கு 3 நாட்கள் வழங்கப்பட்டாலும், கடைசி கட்ட நெருக்கடியை தவிர்க்க முன்னதாக செய்துவிடுவது நல்லது.
இதுதொடர்பாக, கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், இணையதளத்தில் சாய்ஸ் ஃபில்லிங் செய்வதற்கு முன்னதாக கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளின் பட்டியலை தேர்வு செய்து கொள்வது அவசியம். அதுபோல் அதிகமாக சாய்ஸ்களை தேர்வு செய்வதும் முக்கியம். குறைவான வாய்ப்புகளை தேர்வு செய்ய வேண்டாம். பாடப்பிரிவை விட கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுங்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை மட்டும் விரும்பாமல், இ.சி.இ அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த டேட்டா சயின்ஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற படிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
குறிப்பாக பாடப்பிரிவைவிட சிறந்த கல்லூரிகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். அரசு சார்ந்த கல்லூரிகள் என்று வரும் போது, சென்னை கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி., கோவை பி.எஸ்.ஜி டெக்னாலஜி, மதுரை தியாகராஜா, கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி போன்ற கல்லூரிகளை தேர்வு செய்யலாம்.
சென்னையில் உள்ள தனியார் கல்லூரிகள் என்று வரும்போது, எஸ்.எஸ்.என் கல்லூரி, சென்னை இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி, ஆர்.எம்.கே காலேஜ், ராஜலெட்சுமி காலேஜ், ஆர்.எம்.டி காலேஜ், சாய்ராம் காலேஜ், எஸ்.ஆர்.எம் ஈஸ்வரி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா, சவீதா காலேஜ் உள்ளிட்ட பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்யலாம்.
கோவையில் உள்ள தனியார் கல்லூரிகள் என்று வரும்போது, பி.எஸ்.ஜி ஹைடெக், குமரகுரு காலேஜ், ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ், பண்ணாரி இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி, கொங்கு காலேஜ், ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ், ராமகிருஷ்ணா காலேஜ், கே.பி.ஆர் காலேஜ் உள்ளிட்ட பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்யலாம்.
மதுரைப் பகுதியில், மெப்கோ, வேலம்மாள் காலேஜ், திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ, நேஷ்னல் காலேஜ் உள்ளிட்ட பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்யலாம்.
திருச்சி பகுதியில் சாரநாதன் காலேஜ், கே.ராமகிருஷ்ணா, வி.எஸ்.பி., எம்.குமாரசாமி உள்ளிட்ட கல்லூரிகளை தேர்வு செய்யலாம். இதேபோல் சேலம் பகுதியில் சோனா டெக்னாலஜிக்கு முன்னுரிமை கொடுங்கள்.
அடுத்ததாக, இணையதளத்தில் கல்லூரிகளை தேர்வு செய்த உடன் சமர்ப்பிக்க வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை உங்களின் கல்லூரி பட்டியல் வரிசையை சரிபார்த்த பின்னர் சமர்ப்பியுங்கள். இவ்வாறு அவர் விளக்கம் அளித்துள்ளார்.