/indian-express-tamil/media/media_files/2025/10/09/tiruttani-temple-jobs-2025-10-09-12-01-26.jpg)
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருவள்ளூர், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மற்றும் உபகோயில்களில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 26 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.11.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
கூர்க்கா
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,900 – 50,400
இரவுக் காவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,900 – 50,400
மிருதங்கம்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப்பள்ளியில் இருந்து தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,500 – 58,600
புஜங்கம்

வேதபாராயணம்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்களால் நடத்தப்படும் ஆகமப்பள்ளியில் அல்லது வேதபாடசாலையில் இருந்து மூன்றாண்டு படிப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,700 – 50,000
குடைக்காரர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 10,000 – 31,500
மாலைக்கட்டி
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாலை கட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 10,000 – 31,500
தமிழ் புலவர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: தமிழில் B.Lit அல்லது M.A. அல்லது M.Lit படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,500 – 58,600
சமய பிரசங்கி
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்களால் நடத்தப்படும் ஆகமப்பள்ளியில் அல்லது வேதபாடசாலையில் இருந்து ஓராண்டு படிப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,500 – 58,600
சித்த மருத்துவர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.S.M.S படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 36,700 – 116,200
ஓட்டுநர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,500 – 58,600
செவிலியர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.Sc (or) Diploma in Nursing படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 14,000 (தொகுப்பூதியம்)
கணினி இயக்குபவர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: கணினி அறிவியலில் பட்டயப்படிப்பு படித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000 (தொகுப்பூதியம்)
உபகோயில் – திருத்தணி அருள்மிகு கோட்டா ஆறுமுக சுவாமி திருக்கோயில்
நாதஸ்வரம்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப்பள்ளியில் இருந்து தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,700 – 50,000
உபகோயில் – திருத்தணி அருள்மிகு சப்த கன்னியம்மன் திருக்கோயில்
தூர்வை
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 10,000 – 31,500
உபகோயில் – மாத்தூர் அருள்மிகு மகிஷாசூரமர்த்தினியம்மன் திருக்கோயில்
தட்டச்சர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,300 – 48,700
பலவேலை
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 11,600 – 36,800
உபகோயில் – அருள்மிகு சந்தான வேணுகோபால் சுவாமி திருக்கோயில்
பலவேலை
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 11,600 – 36,800
உபகோயில் – கரிம்பேடு அருள்மிகு நாதாதீஸ்வர சுவாமி திருக்கோயில்
நாதஸ்வரம்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப்பள்ளியில் இருந்து தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,700 – 50,000
காவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 11,600 – 36,800
உபகோயில் – திருவாலங்காடு அருள்மிகு வடாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில்
தட்டச்சர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,300 – 48,700
மேளம்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப்பள்ளியில் இருந்து தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 11,600 – 36,800
உபகோயில் – திருப்பாச்சூர் அருள்மிகு வாசீஸ்வர சுவாமி திருக்கோயில்
நாதஸ்வரம்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப்பள்ளியில் இருந்து தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,700 – 50,000
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tiruttanimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணிகை – 631209
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.11.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.