இந்து சமய அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்; உடனே விண்ணப்பிங்க!

இந்து சமய அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; விழுப்புரம் மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் 6 பணியிடங்கள்; 12 ஆம் தேர்ச்சி முதல் டிகிரி தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க; தேர்வு முறை இதுதான்!

இந்து சமய அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; விழுப்புரம் மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் 6 பணியிடங்கள்; 12 ஆம் தேர்ச்சி முதல் டிகிரி தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க; தேர்வு முறை இதுதான்!

author-image
Ambikapathi Karuppaiah
New Update
melmalayanur temple jobs

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள விழுப்புரம், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் அமைந்துள்ள மருத்துவ மையத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

Advertisment

இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.11.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

மருத்துவர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Bachelor of Medicine and Bachelor of Surgery (MBBS) படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 36,700 – 1,16,200

உதவி செவிலியர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Auxiliary Nurse and Midwife certificate (or) Diploma Nursing படித்திருக்க வேண்டும்.

Advertisment
Advertisements

சம்பளம்: ரூ. 18,500 – 58,600

நர்சிங் அசிஸ்டெண்ட்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் Health worker Certificate பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 11,600 – 36,800

வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://melmalayanurangalamman.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், மேல்மலையனூர் (ம) வட்டம், விழுப்புரம் மாவட்டம் – 604204

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.11.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.

Villupuram Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: