தமிழ்நாடு மின் பகிர்மான கழக வேலை வாய்ப்பு; தகுதி, தேர்வு முறை இதுதான்!

தமிழ்நாடு மின் பகிர்மான கழக வேலைவாய்ப்பு அறிவிப்பு; 6 பணியிடங்கள்; தகுதி, தேர்வு முறை என்ன? விண்ணப்பிப்பது எப்படி? உள்ளிட்ட முழு விபரம் இங்கே

தமிழ்நாடு மின் பகிர்மான கழக வேலைவாய்ப்பு அறிவிப்பு; 6 பணியிடங்கள்; தகுதி, தேர்வு முறை என்ன? விண்ணப்பிப்பது எப்படி? உள்ளிட்ட முழு விபரம் இங்கே

author-image
Ambikapathi Karuppaiah
New Update
tneb jobs

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2025

Advertisment

Company Secretary (ACS/ FCS)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். ICSI முடித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 01.01.2025 அன்று 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 1,00,000

Intermediate passed (CS) 

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இடைநிலை ICSI முடித்திருக்க வேண்டும். 

Advertisment
Advertisements

வயதுத் தகுதி: 01.01.2025 அன்று 22 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 25,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.tnpdcl.org/static/tnpdcl/assets/files/linkpdf/cmpsec/tnpdgeclcompsecannex.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி: Chief Engineer/ Personnel, TAMIL NADU POWER DISTRIBUTION CORPORATION LIMITED, 144, Anna Salai, Chennai - 600 002

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.

tneb Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: