TNPL Jobs; 10th, ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன வேலைவாய்ப்பு; 10, ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

TNPL recruitment 2022 for Semi skilled workers: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (TNPL) காலியாக உள்ள SEMI SKILLED WORKER பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 84 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் 20.01.2022 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Semi-Skilled Worker (C)& (B) (Chemical)

காலியிடங்களின் எண்ணிக்கை : 41

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் Diploma in Chemical Engineering / Chemical Technology/ Pulp & Paper Technology படித்திருக்க வேண்டும். மேலும் 5-10 வருட அனுபவம் வேண்டும்.

வயதுத் தகுதி : 01.01.2022 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் SC/SCA/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், BC/BCM/MBC/DNC பிரிவுகளுக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

Semi-Skilled Worker (C)& (D) (Mechanical)

காலியிடங்களின் எண்ணிக்கை : 21

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிட்டர் பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும். மேலும் 5-10 வருட அனுபவம் வேண்டும்.

வயதுத் தகுதி : 01.01.2022 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் SC/SCA/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், BC/BCM/MBC/DNC பிரிவுகளுக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

Semi-Skilled Worker (C)& (D) (Electrical)

காலியிடங்களின் எண்ணிக்கை : 12

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எலக்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும். மேலும் 5-10 வருட அனுபவம் வேண்டும்.

வயதுத் தகுதி : 01.01.2022 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் SC/SCA/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், BC/BCM/MBC/DNC பிரிவுகளுக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

Semi-Skilled Worker (C)& (D) (Instrumentation)

காலியிடங்களின் எண்ணிக்கை : 10

கல்வித் தகுதி : Diploma in Instrumentation Engineering / Instrumentation Technology / Instrumentation and Control Engineering / Electronics & Instrumentation Engineering  (Or)

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மெக்கானிக் பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும். மேலும் 5-10 வருட அனுபவம் வேண்டும்.

வயதுத் தகுதி : 01.01.2022 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் SC/SCA/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், BC/BCM/MBC/DNC பிரிவுகளுக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பள விவரம்

Semi -Skilled (C) : ரூ. 44,538

Semi -Skilled (B) : ரூ. 50,512

Semi -Skilled (D) : ரூ.43,830

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.tnpl.com/work-with-us/   என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி,

GENERAL MANAGER-HR, TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED TNPL UNIT-II, MONDIPATTI, K.PERIYAPATTI (POST), MANAPPARAI (TK), TRICHY DISTRICT-621306, TAMILNADU.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.01.2022

விண்ணப்ப படிவங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 27.01.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய  https://tnpl.b-cdn.net/wp-content/uploads/2022/01/84_Posts_Workmen_TNPL_UNIT-II.pdf என்ற இணையதளப் பக்கத்தை பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tnpl recruitment 2022 for semi skilled workers

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express