scorecardresearch

537 பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வு: தகுதி, விண்ணப்பிக்கும் முறை முழு விவரம்

விதவைகள், எஸ்சி/எஸ்டி வகுப்பினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இந்த பணியிடங்களுக்கு இலவசமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

537 பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வு: தகுதி, விண்ணப்பிக்கும் முறை முழு விவரம்

தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள நான்கு துறைகளில் சுமார் 537 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கான தேர்வு கணினி வழி முறையில் நடைபெறும்.

காலிப்பணியிடங்கள்:

இளநிலை வரைதொழில் அலுவலர் – பொதுப்பணித் துறை – 348

இளநிலை வரைதொழில் அலுவலர் – நெடுஞ்சாலைத் துறை – 183

தொழில்நுட்ப உதவியாளர் – கைத்தறி மற்றும் ஜவுளித் துறை – 1

இளைநிலை பொறியாளர்- மீன்வளத்துறை – 5

மொத்த காலி பணியிடங்கள: 537 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 04, 2021 . இந்தத் தேர்வுகள் ஜூன் ஆறாம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு கட்டணம்:

நிரந்தப்பதிவு கட்டணம் – ரூ. 150

விண்ணப்ப செயல்முறை கட்டணம் – ரூ. 100

விதவைகள், எஸ்சி/எஸ்டி வகுப்பினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இந்த பணியிடங்களுக்கு இலவசமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

வயது வரம்பு:

பொதுப்பனித் துறை: மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(முஸ்லிம்) வகுப்பினர், ஆதிதிராவிடர்,ஆதிதிராவிடர்(அருந்ததியர்கள்), பழங்குடி வகுப்பினர், மற்றும் அனைத்து பிரிவினை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் பொதுப்துறையில் அதிகப்பட்ச வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மற்ற வகுப்பினருக்கு 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறை: ஆதிதிராவிடர்,ஆதிதிராவிடர்(அருந்ததியர்கள்), பழங்குடி வகுப்பினருக்கு அதிகபட்ச வயது 33 ஆகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(முஸ்லிம்) வகுப்பினருக்கு 32 ஆகவும், இதர வகுப்பினருக்கு 30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்கள் குறித்த விரிவான விளம்பரம், தேவையான தகுதிகள், விண்ணப்பமுறைகள் போன்ற தகவல்களைப் பெற tnpsc.gov.in என்ற இணையதளத்தை அணுகவும். தேர்வாணையத்தின் தெரிவுகள் அனைத்தும் தர வரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன. பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லி, தவறான வழியில் வேலை வாங்கி தருவதாகக் கூறும் இடைத்தரகர்களிடம் விண்ணப்பதாரர் மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tnpsc 537 posts apply online for combined engineering subordinate services examination