தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் கடந்த பிப்ரவரி, மார்ச் மற்றும் மே மாதங்களில் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரைவில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி தொடங்கவுள்ளதால், சான்றிதழ்களை விரைவில் பதிவேற்றம் செய்ய தேர்ச்சியடைந்தவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2017-2018ஆம் ஆண்டுக்கான 105 அறநிலையத்துறை செயல் அலுவலர் (கிரேடு III) காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுக் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதியன்று தேர்வு நடைபெற்றது. இதில், 46,316 பேர் பங்கேற்றனர். இத்தேர்வில் செயல் அலுவலர் பணிக்கு தேர்ச்சி பெற்ற 55 பேரும் சான்றிதழ் சரிபார்ப்புக்காகத் தேவையான சான்றுகளைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
2018-2019ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிலவியல் மற்றும் சுரங்க துறையில் உதவி நிலவியலாளர், புவியியலாளர் பதவிகளுக்கான 16 காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்
கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி நடைபெற்ற தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பணியிடம் 9, உதவிப் பொறியாளர் பணியிடம் 32 ஆகியவற்றுக்குத் தேர்வான 91 பேர் உள்ளிட்டோர் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வரும் 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை சான்றுகளை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.