/indian-express-tamil/media/media_files/2025/07/14/tnpsc-exam-2025-07-14-16-44-00.jpg)
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ள நிலையில், தேர்வு திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இரண்டாம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ தேர்வை அறிவித்துள்ளது. மொத்தம் 645 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் நேர்முகத் தேர்வு அடங்கிய 50 பணியிடங்களும், நேர்முகத் தேர்வு அல்லாத 595 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுக்கு 13.08.2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
நேர்முகத் தேர்வு பதவிகள் (குரூப் 2)
உதவி ஆய்வாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 6
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் சமூகப் பணியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை 18
இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை 18
நன்னடத்தை அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 5
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். உளவியல் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
சம்பளம்: நிலை 18
சார் பதிவாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 6
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை 18
தனிப்பிரிவு உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 8
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை 18
உதவிப் பிரிவு அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இளநிலை சட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை 16
வனவர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 22
கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை 16
நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள் (குரூப் 2ஏ)
முதுநிலை ஆய்வாளர் (கூட்டுறவு)
காலியிடங்களின் எண்ணிக்கை: 65
கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை 12
உதவி ஆய்வாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை 12
தணிக்கை ஆய்வாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 11
கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை 12
மேற்பார்வையாளர்/ இளநிலைக் கண்காணிப்பாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை 11
உதவியாளர் நிலை III
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை 10
உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 460
(பல்வேறு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் உதவியாளர்கள்)
கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை 10, நிலை 9
முதுநிலை வருவாய் ஆய்வாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 40
கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை 10
செயல் அலுவலர் (இந்து சமய அறநிலையத் துறை)
காலியிடங்களின் எண்ணிக்கை: 11
கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை 10
கீழ்நிலை செயலிட எழுத்தர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை 9
வயது வரம்பு; 01.07.2025 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு. சில பணிகளுக்கு வயது வரம்பு வேறுபடும்.
தேர்வு முறை: குரூப் 2 பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகதேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். குரூப் 2 ஏ பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். முதல்நிலைத் தேர்வு இரண்டு பதவிகளுக்கும் ஒன்றாக நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வு என்பது முதன்மைத் தேர்வுக்கான தகுதித் தேர்வு மட்டுமே.
முதல்நிலைத் தேர்வு மூன்று பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், 2 ஆம் பகுதியில் திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெறும். மூன்றாம் பகுதியில் தமிழ் அல்லது ஆங்கில பாடத்திலிருந்து 100 வினாக்கள் இடம்பெறும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். தேர்வு நடைபெறும் நாள்: 28.09.2025
குரூப் 2 பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு
இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு. 3 மணி நேரத்திற்கு 100 மதிப்பெண்களுக்கு விரிந்துரைக்கும் வகையில் நடைபெறும். இரண்டாம் தாள் பொது அறிவு. 3 மணி நேரத்திற்கு 300 மதிப்பெண்களுக்கு விரிந்துரைக்கும் வகையில் நடைபெறும். பொது அறிவு பகுதியில் எடுக்கும் மதிப்பெண்கள் இறுதித் தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
குரூப் 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு
இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாள் தமிழ் மொழித் தகுதித் தேர்வு. 3 மணி நேரத்திற்கு 100 மதிப்பெண்களுக்கு விரிந்துரைக்கும் வகையில் நடைபெறும். இரண்டாம் தாளில் பொது அறிவில் 150 வினாக்கள், திறனறியில் 50 வினாக்கள் 200 வினாக்களுக்கு நடைபெறும். 3 மணி நேரத்திற்கு 300 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகையில் நடைபெறும்.
தேர்வு திட்டத்தில் மாற்றம்
கடந்த ஆண்டு குரூப் 2ஏ தேர்வுக்கான முதன்மைத் தேர்வில் மதிப்பீட்டு தாளில் பொது அறிவில் 100 கேள்விகள், திறனறியில் 40 வினாக்கள், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் 60 வினாக்கள் என 200 வினாக்கள் கேட்கப்பட்டது.
/indian-express-tamil/media/post_attachments/56d33bca-0fd.jpg)
ஆனால் இந்த முறை மொழிப் பகுதியான தமிழ் அல்லது ஆங்கிலத்திலிருந்து கேட்கப்படும் 60 வினாக்கள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் பொது அறிவில் 150 வினாக்களும் திறனறியில் 50 வினாக்களும் கேட்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/09ed9cdb-372.jpg)
இது மொழிப் பாடங்களை நன்றாக படித்தவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருப்பதாக தேர்வர்களும் நிபுணர்களும் கூறுகின்றனர். குறிப்பாக ஆங்கில மொழிப் பாடங்களை படித்தவர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் தமிழ் மொழிப்பாடங்களை படித்தவர்கள் முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு ஆகிய இரண்டுக்கும் ஒரளவு பொதுவான பாடத்தலைப்புகளை படிப்பர். இதனால் அவர்களுக்கு மொழிப் பாடம் நீக்கம், மதிப்பெண்கள் பெறுவதில் சிரமத்தை அளித்தாலும் பெரிய ஏமாற்றம் இருக்காது.
ஆனால் ஆங்கில மொழிப் பாடத்தை முதல்நிலைத் தேர்வில் தேர்வு செய்து எழுதியவர்கள், முதன்மைத் தேர்வுக்கு தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்காக தமிழ் மொழிப்பாடத்தை படிக்க வேண்டும். மேலும் ஆங்கில பாடத்தில் கேட்கப்படும் 60 வினாக்கள் நீக்கப்பட்டுள்ளதால், மொழிப் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர்.
மேலும் முதன்மைத் தேர்வில் பொது அறிவு பகுதியில் தமிழ் சமூகம், கலாச்சாரம், பண்பாடு என்ற தலைப்பில் 30 கேள்விகள் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் இலக்கியம், வரலாறு சார்ந்த கேள்விகள் இடம்பெறும். இது தமிழ் மொழிப் பாடங்களை நன்றாக படித்தவர்களுக்கு உதவும். அதேநேரம் ஆங்கில மொழிப் பாடம் நீக்கப்பட்டுள்ளதால், அதில் கேட்கப்படும் இலக்கியம், இலக்கணம் சார்ந்த எளிய கேள்விகள் இல்லாமல், ஆங்கில மொழிப் பாடம் படித்தவர்கள் மதிப்பெண்கள் பெற சிரமப்படுவர்.
குறிப்பாக டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் மொழிப்பாடங்கள் அதிக மதிப்பெண்கள் பெற உதவுவதாக கூறப்படும் நிலையில், முதன்மைத் தேர்வில் மொழிப் பாடம் நீக்கப்பட்டுள்ளது தேர்வர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. பொது அறிவு பகுதிக்கான பாடத்திட்டம் மிகப் பெரியது, கேள்விகளின் கடினத்தன்மையும் சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில், தேர்வர்கள் மொழிப் பாடங்களையே அதிகம் சார்ந்து இருப்பர். ஆனால் தற்போதைய தேர்வு திட்டம் மாற்றம் மொழிப் பாடத்தை சார்ந்திருக்கும் நிலையை மாற்றியுள்ளது.
அதேநேரம் இந்த தேர்வு திட்டம் மாற்றம் தமிழ் மொழிப் பாடத்தை நன்றாக படித்தவர்களுக்கு உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், வேலை கிடைக்க வழிவகுக்கும் மதிப்பீட்டுத் தேர்வான குரூப் 2ஏ முதன்மைத் தேர்வுக்கு மொழிப் பாடம் நீக்கப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிப்பதாக தேர்வர்கள் கூறுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.