/indian-express-tamil/media/media_files/2025/10/25/tnpsc-group-4-cutoff-junior-assistant-post-2025-10-25-16-14-27.jpg)
TNPSC Group 4 Cutoff Junior Assistant Post| TNPSC Group 4 Counselling| TNPSC Junior Assistant
மொத்தம் 4662 பணியிடங்களுக்கு 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. ஓவர் ஆல் ரேங்கிங், கம்யூனிட்டி ரேங்கிங் மற்றும் நீங்கள் முக்கியத்துவம் (Preference) கொடுத்த வேலைக்கான ஜாப் டைப் வித் ரேங்கிங் ஆகியவை ரிசல்ட்டில் வெளியாகி இருக்கிறது.
குரூப் 4-ல் வி.ஏ.ஓ (VAO), ஜூனியர் அசிஸ்டன்ட், செக்யூரிட்டி, டைப்பிஸ்ட், ஸ்டெனோ டைப்பிஸ்ட், ஃபீல்ட் அசிஸ்டன்ட், ஜூனியர் எக்ஸிகியூடிவ், ஜூனியர் ரெவென்யூ இன்ஸ்பெக்டர், ஃபாரஸ்ட் வாட்சர், ஃபாரஸ்ட் கார்டு என நிறைய பணிகள் இருக்கின்றன.
இந்த 4662 காலிப் பணியிடங்களில், கிட்டத்தட்ட 1969 அதாவது சுமார் 40% பணியிடங்கள்—இந்த ஜூனியர் அசிஸ்டன்ட் (செக்யூரிட்டி மற்றும் நான்-செக்யூரிட்டி) பணிக்கு மட்டுமே உள்ளன.
கட்ஆஃப் நிலவரம் மற்றும் அத்தியாவசிய தகுதிகள்
ஜூனியர் அசிஸ்டன்ட் பணியின் கட்ஆஃப் மற்ற வேலைகளை விட மிகக் குறைவாக (Least Cutoff) இருக்க வாய்ப்புள்ளது. நீங்கள் 150+ கேள்விகளுக்கு சரியாகப் பதிலளித்திருந்தாலும், உங்களுக்கு இந்த வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. சில கம்யூனிட்டிகளில் 150-க்கு கீழேயும் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ள ஒரே வேலை இதுதான். இது முழுக்க முழுக்க கம்யூனிட்டி ரேங்கிங்கை (Community Ranking) அடிப்படையாகக் கொண்டது.
- ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு உள்ளே செல்ல...
- நீங்கள் டைப்பிஸ்ட் படித்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
நீங்கள் லோயர்/ஹையர் முடித்திருக்க வேண்டும் என்ற தகுதியும் இதற்கு கிடையாது.
ஆனால், நீங்கள் டைப்பிஸ்ட் அல்லது ஸ்டெனோ டைப்பிஸ்ட் பணிக்குச் செல்ல வேண்டுமானால், அதற்குத் தகுதியான டைப்பிஸ்ட் தகுதியை முடித்திருக்க வேண்டும். அதேபோல், ஃபாரஸ்ட் வாட்சர் அல்லது ஃபாரஸ்ட் கார்டு பணிக்கு முயன்றால், அதற்குரிய உயரம், மார்பளவு, பார்வைத்திறன் (கண்ணாடி அணியாத நிலை) போன்ற உடல் தகுதிகள் மற்றும் ஓட்டுநர் உரிமம் (Driving License) போன்ற குறிப்பிட்ட தேவைகளை நீங்கள் கட்டாயமாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.
மாவட்ட வாரியான காலியிடங்கள் மற்றும் கவுன்சிலிங்
ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு தமிழ்நாடு முழுக்க எந்தெந்த மாவட்டங்களில் (District) காலியிடங்கள் உள்ளன என்பது வெளியிடப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. வெப்சைட்டிற்குச் சென்று, 'குடிமைப் பணிகள் குரூப் 4' என்பதைத் தேர்ந்தெடுத்து, ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியைத் தேர்வு செய்தால், மாவட்ட வாரியான காலியிடங்கள் மற்றும் எந்த மாவட்டத்திற்கு யாருக்கு முன்னுரிமை (Priority) என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீங்கள் விரும்பிய மாவட்டம் உங்களுக்குக் கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. உதாரணமாக, நீங்கள் மதுரை மாவட்டக்காரராக இருந்தாலும், கவுன்சிலிங்கில் வேறு ஏதேனும் மாவட்டம் கிடைக்கலாம். நீங்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருந்தால், உங்கள் சொந்த மாவட்டமே கிடைக்க வாய்ப்புள்ளது.
(வேலை கிடைத்த பிறகு, அனுபவம் (Experience) பெற்ற பின்பு, நாம் மாற்றிக் கொள்ளலாம்.)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us