Advertisment

TNPSC Group 4: குரூப் 4 காலியிடங்கள் மீண்டும் அதிகரிப்பு; கட் ஆஃப் குறையுமா?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு காலியிடங்கள் மீண்டும் அதிகரிப்பு; கட் ஆஃப் எப்படி இருக்கும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNPSC

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு (பிரதிநிதித்துவ படம்)

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களை மீண்டும் அதிகரித்துள்ளதால், கட் ஆஃப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும் என இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. பின்னர் தேர்வு முடிவுகள் வெளியிடும் நேரத்தில், குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் 10,117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்தது.

இதையும் படியுங்கள்: சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!

இருப்பினும் தேர்வர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் எனப் பலரும் குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில், தேர்வாணையம் குரூப் 4 பணியிடங்களை 10,178 ஆக அதிகரித்து அறிவித்தது. மேலும் காலியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் தேர்வாணையம் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் குரூப் 4 காலியிடங்கள் 10,292 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இளநிலை உதவியாளர் காலியிடங்கள் 5289 இலிருந்து 5321 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தட்டச்சர் காலியிடங்கள் 3297 இலிருந்து 3377 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் 1077 இலிருந்து 1079 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் (425), வரித் தண்டலர் (69), கள உதவியாளர் (20), பண்டக காப்பாளர் (1) உள்ளிட்ட பதவிகளுக்கான காலியிடங்களில் மாற்றமில்லை.

குரூப் 4 காலியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், கட் ஆஃப் மதிப்பெண்கள் கணிசமாக குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் காலியிடங்கள் குறைவான அளவே அதிகரிக்கப்பட்டுள்ளதால், கட் ஆஃப் மதிப்பெண்ணில் பெரிய அளவுக்கு மாற்றம் இருக்காது. ஒரு சில பிரிவுகளுக்கு ஒரிரு மதிப்பெண்கள் குறையலாம். ஏனெனில் ஒரே கட் ஆஃப் மதிப்பெண்ணில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்ளனர். என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tnpsc Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment