/indian-express-tamil/media/media_files/2025/10/19/tnpsc-group-4-results-group-4-communal-rank-group-4-overall-rank-2025-10-19-12-45-26.jpg)
TNPSC Group 4 Results| Group 4 Communal Rank| Group 4 Overall Rank| TNPSC Rank List
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 4, 2025 தேர்வு முடிவுகள் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓவர் ஆல் ரேங்க் Vs. கம்யூனல் ரேங்க்
தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, தேர்வர்கள் இரண்டு வகையான தரவரிசைகளைக் (Rank) காண்பார்கள்: ஓவர் ஆல் ரேங்க் (Overall Rank) மற்றும் கம்யூனல் ரேங்க் (Communal Rank). இவை இரண்டுமே முக்கியம் என்றாலும், அவற்றின் பயன்பாடு வேறுபடுகிறது.
1. ஓவர் ஆல் ரேங்க் (Overall Rank) - கவுன்சிலிங் நாள் முடிவு!
ஓவர் ஆல் ரேங்க் என்பது, தேர்வு எழுதிய அத்தனை தேர்வர்களுக்குள்ளும் நீங்கள் பெற்றிருக்கும் மொத்தத் தரவரிசையைக் குறிக்கும். இந்தக் குரூப் 4 தரவரிசை, உங்களுக்கு எந்த நாளில் கவுன்சிலிங் (Counselling) நடைபெறும் என்பதை முடிவு செய்யப் பயன்படுகிறது.
உதாரணம்: நீங்கள் 2200-வது ஓவர் ஆல் ரேங்கில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒரு நாளைக்கு 400 பேரை கவுன்சிலிங்கிற்கு அழைத்தால், நீங்கள் தோராயமாக ஆறாவது நாள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவீர்கள்.
2. கம்யூனல் ரேங்க் (Communal Rank) - பணியிட உறுதி!
கம்யூனல் ரேங்க் என்பது, நீங்கள் எந்த சமூகப் பிரிவைச் சேர்ந்தவரோ (BC, MBC, SC, ST போன்றவை) அந்தப் பிரிவுக்குள் நீங்கள் பெற்றிருக்கும் தரவரிசையைக் குறிக்கும். இந்தக் கம்யூனல் ரேங்க்தான் உங்களுக்குப் பணியிடம் (Job Post) கிடைக்குமா இல்லையா என்பதை உறுதி செய்யும் முக்கிய காரணி ஆகும்.
உதாரணம் (BC பிரிவுக்கு): ஜூனியர் அசிஸ்டன்ட் மற்றும் வி.ஏ.ஓ. பணியிடங்களில், பி.சி. பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை (பொதுப் போட்டி உட்பட) தோராயமாக 1100 என வைத்துக்கொண்டால், BC கம்யூனல் ரேங்கில் 1 முதல் 1100 வரை உள்ளவர்களுக்குப் பணியிடம் கிடைக்க உறுதியான வாய்ப்பு உள்ளது. நீங்கள் 1100-வது கம்யூனல் ரேங்கில் இருந்தால் கூட உங்களுக்கு ஒரு போஸ்டிங் கிடைத்துவிடும்.
பிசி பிரிவைப் பொறுத்தவரை, கம்யூனல் ரேங்கில் உள்ள எண்ணின் இரண்டு மடங்கு அளவில் நீங்கள் ஓவர் ஆல் ரேங்கில் இருப்பீர்கள். (உதாரணமாக, கம்யூனல் ரேங்க் 1100 என்றால், ஓவர் ஆல் ரேங்க் சுமார் 2200-ஆக இருக்கும்).
இறுதி முடிவு
சுருக்கமாகச் சொன்னால், போஸ்டிங் கிடைக்குமா என்று பார்ப்பதற்கு உங்கள் கம்யூனல் ரேங்க் நிலையைப் பாருங்கள். நீங்கள் எந்த நாளில் கவுன்சிலிங் செல்ல வேண்டும் என்று தெரிந்துகொள்ள ஓவர் ஆல் ரேங்கைப் பாருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.