TNPSC Group 4 result: குரூப் 4 ரிசல்ட் எதிர்பார்ப்பு; எந்த கம்யூனிட்டியில் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்?

TNPSC Group 4 Exam 2025: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? ஒவ்வொரு கம்யூனிட்டியிலும் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்? முழு விபரம் இங்கே

TNPSC Group 4 Exam 2025: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? ஒவ்வொரு கம்யூனிட்டியிலும் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்? முழு விபரம் இங்கே

author-image
Ambikapathi Karuppaiah
New Update
tnpsc

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், ஒவ்வொரு கம்யூனிட்டியிலும் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்? என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூலை 12 ஆம் தேதி நடத்தியது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 4662 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அறிவிப்பின்போது 3935 பணியிடங்கள் இருந்த நிலையில், தற்போது 727 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த குரூப் 4 தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இரண்டாம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெற்றிருந்தன.

இந்த குரூப் 4 தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்களும் நிபுணர்களும் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையில், குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Advertisment
Advertisements

அதன்படி, தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், ஒவ்வொரு கம்யூனிட்டியிலும் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்? என்பது குறித்த தகவல்கள் ஜானகிராமன் டி.என்.பி.எஸ்.சி அகாடமி என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.

வீடியோவின்படி, குரூப் 4 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) வெளியாக வாய்ப்புள்ளது. இளநிலை உதவியாளர் பணியிடங்களில் 2300 இடங்கள் உள்ளன. இதில் பொது பிரிவினருக்கு 713 இடங்களும், பி.சி பிரிவினருக்கு 610 இடங்களும், பி.சி.எம் பிரிவினருக்கு 86 இடங்களும், எம்.பி.சி பிரிவினருக்கு 460 இடங்களும், எஸ்.சி பிரிவினருக்கு 445 இடங்களும், எஸ்.சி.ஏ பிரிவினருக்கு 69 இடங்களும், எஸ்.டி பிரிவினருக்கு 23 இடங்களும் உள்ளன. கூடுதலாக எஸ்.சி பிரிவினருக்கு பின்னடைவு பணியிடங்களில் 100 இடங்களுக்கு மேல் காலியாக உள்ளன.

அதேநேரம், மாற்றுத்திறனாளி, ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்ட சிறப்பு ஓதுக்கீட்டு பிரிவினருக்கான இடங்கள் நீங்கலாக, பி.சி பிரிவினருக்கு 550 இடங்களும், பி.சி.எம் பிரிவினருக்கு 70 இடங்களும், எம்.பி.சி பிரிவினருக்கு 410 இடங்களும், எஸ்.சி பிரிவினருக்கு 400 இடங்களும், எஸ்.சி.ஏ பிரிவினருக்கு 62 இடங்களும், எஸ்.டி பிரிவினருக்கு 20 இடங்களும் வரும்.

மேலும் பொது பிரிவில் பி.சி பிரிவினர் சுமார் 350 பேர் பதவி பெற வாய்ப்புள்ளது. எனவே மொத்தமாக 950 பி.சி பிரிவினர் இளநிலை உதவியாளர் வேலை பெற வாய்ப்புள்ளது. இதேபோல் பொது பிரிவில் எம்.பி.சி பிரிவினர் சுமார் 200 பேர் பதவி பெற வாய்ப்புள்ளது. எனவே மொத்தமாக 650 எம்.பி.சி பிரிவினர் இளநிலை உதவியாளர் வேலை பெற வாய்ப்புள்ளது. மேலும் பொது பிரிவில் எஸ்.சி பிரிவினர் சுமார் 50 பேர் பதவி பெற வாய்ப்புள்ளது. எனவே மொத்தமாக 450 எஸ்.சி பிரிவினர் இளநிலை உதவியாளர் வேலை பெற வாய்ப்புள்ளது.

Tnpsc Group4 Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: