/indian-express-tamil/media/media_files/2025/10/19/tnpsc-group-4-results-group-4-communal-rank-group-4-overall-rank-2025-10-19-12-45-26.jpg)
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், எந்த தரவரிசை வரை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூலை 12 ஆம் தேதி நடத்தியது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 4662 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்தநிலையில், எந்த தரவரிசை வரை வி.ஏ.ஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் கிடைக்கும் என்பதை சாதிப்பிரிவு வாரியாக இப்போது பார்ப்போம்.
இதுதொடர்பாக சென்னை ஐ.ஏ.எஸ் அகாடமி என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவின்படி, வி.ஏ.ஓ மற்றும் ஜூனியர் அசிஸ்டெண்ட் பதவிகளில் மொத்தம் 2200 காலியிடங்கள் உள்ளன. இதில் வி.ஏ.ஓ பதவிக்கு 208 இடங்களும், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 1969 இடங்களும், கள உதவியாளர் பதவிக்கு 17 இடங்களும் உள்ளன.
இதில் இடஒதுக்கீட்டின்படி மொத்தமாக பொதுப்பிரிவில் 719 இடங்களும், பி.சி பிரிவில் 619 இடங்களும், பி.சி.எம் பிரிவில் 82 இடங்களும், எம்.பி.சி பிரிவில் 472 இடங்களும், எஸ்.சி பிரிவில் 450 இடங்களும், எஸ்.சி.ஏ பிரிவில் 76 இடங்களும், எஸ்.டி பிரிவில் 50 இடங்களும் உள்ளன.
எதிர்ப்பார்க்கப்படும் ரேங்க்
பொதுப் பிரிவு - 719
பி.சி – 900 – 1000
பி.சி.எம் – 110 - 130
எம்.பி.சி – 600 – 750
எஸ்.சி – 650 - 780
எஸ்.சி.ஏ – 120 - 140
எஸ்.டி – 80 - 100
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us