scorecardresearch

கோவை முதல் இடம்… அண்ணா யூனிவர்சிட்டி டாப் 15 அரசு பொறியியல் கல்லூரிகள் எவை?

கடந்த ஐந்து ஆண்டுகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாட பிரிவில் மாணவர்கள் சேர்ந்த கட் ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகம் ஒரு பட்டியல் வெளியிட்டது. அதை அடிப்படையாக வைத்து இந்த டாப் கல்லூரிகள் வரிசையை கல்வியாளர் ரமேஷ் பிரபா தெரிவித்துள்ளார்.

கோவை முதல் இடம்… அண்ணா யூனிவர்சிட்டி டாப் 15 அரசு பொறியியல் கல்லூரிகள் எவை?
அண்ணா பல்கலைக்கழகம் (Express Photo)

பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரிக்குள் தனது கனவுத் துறையை தேர்ந்தெடுத்து படிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். எந்த துறையை தேர்ந்தெடுத்தால் வேலைவாய்ப்பு சுலபமாக கிடைக்கும் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் இருக்கும். 

அந்த குழப்பத்தை களைப்பதற்காக கல்வியாளர் டாக்டர் ரமேஷ் பிரபா, அண்ணா பல்கலைக்கழகத்தினுடைய  முதன்மையான 15 பொறியியல் உறுப்புக் கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளார். அவை:

1. அண்ணா பல்கலைக்கழகம் மண்டல வளாகம், கோயம்புத்தூர் – இந்த கல்லூரி முதல் இடத்தை பிடித்துள்ளது. இக்கல்லூரியில் ஐந்தாண்டுகளுக்கான சராசரி கட்-ஆஃப் மதிப்பெண் 185.52 ஆகும்.

2. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி – இந்த கல்லூரி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. நீண்ட காலமாக இருக்கின்ற புகழ் பெற்ற கல்லூரியான இதற்கு, பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் என்று ஒரு பெயர் இருந்தது. இக்கல்லூரியில் ஐந்தாண்டுகளுக்கான சராசரி கட்-ஆஃப் மதிப்பெண் 180.45 ஆகும். 

3. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், காஞ்சிபுரம் – இந்த கல்லூரி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இக்கல்லூரியில் ஐந்தாண்டுகளுக்கான சராசரி கட்-ஆஃப் மதிப்பெண் 175.40 ஆகும்.

4. அண்ணா பல்கலைக்கழகம் மண்டல வளாகம், மதுரை – இந்த கல்லூரி நான்காம் இடத்தை பிடித்துள்ளது. இக்கல்லூரியில் ஐந்தாண்டுகளுக்கான சராசரி கட்-ஆஃப் மதிப்பெண் 172.00 ஆகும்.

5. அண்ணா பல்கலைக்கழகம் மண்டல வளாகம், திருநெல்வேலி – இந்த கல்லூரி ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. இக்கல்லூரியில் ஐந்தாண்டுகளுக்கான சராசரி கட்-ஆஃப் மதிப்பெண் 168.09 ஆகும்.

6. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், விழுப்புரம் – இந்த கல்லூரி ஆறாம் இடத்தை பிடித்துள்ளது. இக்கல்லூரியில் ஐந்தாண்டுகளுக்கான சராசரி கட்-ஆஃப் மதிப்பெண் 167.01 ஆகும்.

7. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கின்ற நாகர்க்கோயிலில் இருக்கிறது – இந்த கல்லூரி ஏழாம் இடத்தை பிடித்துள்ளது. இக்கல்லூரியில் ஐந்தாண்டுகளுக்கான சராசரி கட்-ஆஃப் மதிப்பெண் 162.95 ஆகும்.

8. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், திண்டிவனம் – இந்த கல்லூரி எட்டாம் இடத்தை பிடித்துள்ளது. இக்கல்லூரியில் ஐந்தாண்டுகளுக்கான சராசரி கட்-ஆஃப் மதிப்பெண் 157.48 ஆகும்.

9. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஆரணி – இந்த கல்லூரி ஒன்பதாம் இடத்தை பிடித்துள்ளது. இக்கல்லூரியில் ஐந்தாண்டுகளுக்கான சராசரி கட்-ஆஃப் மதிப்பெண் 157.38 ஆகும்.

10. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், திண்டுக்கல் – இந்த கல்லூரி பத்தாம் இடத்தை பிடித்துள்ளது. இக்கல்லூரியில் ஐந்தாண்டுகளுக்கான சராசரி கட்-ஆஃப் மதிப்பெண் 152.89 ஆகும்.

11. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், பண்ருட்டி – இந்த கல்லூரி பதினோராம் இடத்தை பிடித்துள்ளது. இக்கல்லூரியில் ஐந்தாண்டுகளுக்கான சராசரி கட்-ஆஃப் மதிப்பெண் 148.38 ஆகும்.

12. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், பட்டுக்கோட்டை – இந்த கல்லூரி பன்னிரெண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இக்கல்லூரியில் ஐந்தாண்டுகளுக்கான சராசரி கட்-ஆஃப் மதிப்பெண் 148.27 ஆகும்.

13. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், அரியலூர் – இந்த கல்லூரி பதிமூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இக்கல்லூரியில் ஐந்தாண்டுகளுக்கான சராசரி கட்-ஆஃப் மதிப்பெண் 141.07 ஆகும்.

14. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ராமநாதபுரம் – இந்த கல்லூரி பதினான்காம் இடத்தை பிடித்துள்ளது. இக்கல்லூரியில் ஐந்தாண்டுகளுக்கான சராசரி கட்-ஆஃப் மதிப்பெண் 132.30 ஆகும்.

15. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், திருக்குவளை – இந்த கல்லூரி பதினைந்தாம் இடத்தை பிடித்துள்ளது. இக்கல்லூரியில் ஐந்தாண்டுகளுக்கான சராசரி கட்-ஆஃப் மதிப்பெண் 130.76 ஆகும்.

மேலும், “அண்ணா பல்கலைக்கழகம் தன்னுடைய சிறந்த கல்லூரிகளின் பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளன. அவர்கள் மாணவர்களின் விருப்பத்தின் படி கல்லூரிகளை வரிசைப்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர். 2017 முதல் 2021 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கான சராசரி கட் ஆஃப் மதிப்பெண்களையே, 

அவர்கள் கல்லூரிகளை தரவரிசைப்படுத்தும் தகுதியாக எடுத்துக்கொண்டனர்.

கடந்த சில ஆண்டுகளாக, இந்த கல்லூரிகளில் மாணவர்கள் மிகவும் விருப்பமான தேர்ந்தெடுக்கும் துறையாக கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை இருக்கிறது.

இத்தகவல்களை வைத்து அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டிலுள்ள 485 பொறியியல் கல்லூரிகளை பட்டியலிட்டிருக்கிறது.

மாணவர்கள் இதை ஒரு குறிப்புகளாக எடுத்துக் கொண்டு, கவுன்செல்லிங் செல்வதற்கு முன் நிறைய பகுப்பாய்வு செய்வது நல்லது. பொதுவாக தமிழக மாணவர்கள் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு எதிர்பார்ப்பது வழக்கம். ஏனென்றால், படிப்பின் கட்டணம் மிகவும் குறைவாக இருக்கும். இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பல மாணவர்கள் தாங்கள் விரும்பிய துறைக்குச் செல்ல முடியும்”, என்று கல்வியாளர் டாக்டர் ரமேஷ் பிரபா கூறுகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Top 15 constituent colleges of anna university

Best of Express