TRB Jobs; ஆசிரியர் தேர்வு வாரிய வேலை வாய்ப்பு; 2708 பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு; 2708 பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை இதுதான்!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு; 2708 பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை இதுதான்!

author-image
Ambikapathi Karuppaiah
New Update
TRB UGTRB Result 2024 released for Graduate teacher Tamil News

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Advertisment

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 2708 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி தேதி 10.11.2025

உதவிப் பேராசிரியர் (Assistant Professor)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2708

கல்வித் தகுதி: முதுநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் நெட் (NET) அல்லது ஸ்லெட் (SLET) அல்லது செட் (SET) தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். அல்லது புகழ்பெற்ற நிறுவனங்களில் பி.ஹெச்.டி முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2025 அன்று 57 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி, பி.சி, எம்.பி.சி, பி.சி.எம் பிரிவினர் 58 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

Advertisment
Advertisements

சம்பளம்: ரூ. 57,700 – 1,82,400

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாளில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு மற்றும் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் இருந்து வினாக்கள் இடம்பெறும். தமிழ் தகுதித் தேர்வு 30 மதிப்பெண்களுக்கு நடைபெறும். பாடத் தேர்வு 100 கேள்விகளுடன் 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இரண்டாம் தாள் விரிந்துரைக்கும் வகையில் 50 மதிப்பெண்களுக்கு நடைபெறும். மொத்தமாக எழுத்துத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.

அனுபவத்திற்கு 15 மதிப்பெண்களும், நேர்முகத் தேர்விற்கு 15 மதிப்பெண்களும் வழங்கப்படும். ஒட்டுமொத்தமாக 230 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.trb.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600, எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளுக்கு ரூ.300

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.11.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.

Trb Exam Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: