Advertisment

தொலைதூர கல்வி முறையில் ரியல் எஸ்டேட், ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகள் ரத்து - யுஜிசி

ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் ரியல் எஸ்டேட் படிப்புகளுக்கு தொலைதூர கல்வி திட்டங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தடை செய்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
university grants commission, ugc, ugc distance education, hotel management, real estate,

ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் ரியல் எஸ்டேட் படிப்புகளுக்கு தொலைதூர கல்வி திட்டங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தடை செய்துள்ளது.

Advertisment

பல்வேறு ஒழுங்குமுறை அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்கு இணங்க, ஹோட்டல் மேலாண்மை, சமையல் ஆய்வுகள் மற்றும் ரியல் எஸ்டேட்  ஆகியவற்றில் உள்ள தொலைதூர கல்வி திட்டங்கள் 2019-20 மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வி அமர்வில் இருந்து அங்கீகரிக்கப்படாது  என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் சமீபத்திய அறிக்கை கூறியுள்ளது.

இருப்பினும், தற்போதைய கல்வி ஆண்டில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் படிப்பு அங்கீகரிக்கப்படும் என்று தெரிவத்திருக்கிறது.

 

 

யுஜிசி திறந்த மற்றும் தொலைதூர கற்றல் விதிமுறைகளை 2017- ல் அறிவித்தது.  அந்த விதிமுறைகளின் கீழ் மருத்துவம், பொறியியல் மற்றும் கட்டிடக்கலை போன்ற தொழில்முறை திட்டங்கள் தொலைதூர கல்வி திட்டங்களுக்கு கீழ் கொண்டுவரப்படாது என்று அறிவித்து இருந்தது . பின்னர் , விவசாயம் தொடர்பான தொலைதூர பட்டப்படிப்புகளை வழங்கவும் ஆணையம் தடை விதித்தது.

மேலும், இந்த ஆண்டு மாணவர்களின் சேர்க்கை காலக்கெடுவிற்கான  கடைசி நாளை நீட்டிக்கவும் பல்கலைக்கழக மானியக் குழு  முடிவு செய்திருக்கிறது.

Ugc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment