நீட் தேர்வு செப்டம்பர் 12 அன்று நடைபெற்றது. பெரும்பாலும் தேர்வு நடந்த 1 மாதத்திற்குள் முடிவுகள் வெளியிடப்படும். ஆனால், இந்தாண்டு இதுவரை ஆன்சர் கீயே வெளியிடப்படவில்லை. அது வெளியான பிறகே, தேர்வு முடிவுகள் வெளியாகுவது வழக்கம். அந்த ஆன்சர் கீ மற்றும் OMR response sheet ஆகியவை neet.nic.in என்ற என்டிஏயின் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்படும்.
இதைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்கள் ஆன்சர் கீயில் எதேனும் கேள்விக்கு விடை தவறாகும் இருக்கும் பட்சத்தில், தகுந்த விளக்கத்துடன் கேள்வி எழுப்பலாம். அந்த பிராசஸ் முடிந்த பிறகு, இறுதி ஆன்சர் கீ வெளியிடப்படும்.
நீட் தேர்வு முடிவுகளுடன், அகில இந்திய தரவரிசை பட்டியலும் வெளியிடப்படும். முக்கியம்சமாக இந்தாண்டு, டை பிரேக்கிங்கில் விண்ணப்பதாரரின் வயது ஒரு காரணியாக கருதப்பட்டு வந்தது நீக்கப்பட்டுள்ளது.
டை பிரேக்கிங் ஃபார்முலா(Tie Breaking Formula)
இரண்டு மாணவர்கள் ஒரே மதிப்பெண்களைப் பெற்றால், அவர்களது மார்க்கை முடிவு செய்ய டை பிரேக்கிங் ஃபார்முலா பயன்படுத்தப்படுகிறது. உயிரியலில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவருக்கே முன்னுரிமை வழங்கப்படும். அப்போதும், டை நீடித்ததால், அடுத்ததால் வேதியியலில் அதிக மதிப்பெண் கணக்கிடப்படும். அப்போதும் மார்க் டையாகும் பட்சத்தில், அனைத்து தேர்விலும் குறைவான அளவில் தவறான விடைகளை எழுதியவருக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
நீட் 2021 மார்க் மதிப்பீடு முறை
நீட் 2021 இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) ஆகியவற்றை குறித்து 180 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். அதில், இயற்பியல் மற்றும் வேதியியல் பிரிவுகளில் தலா 45 கேள்விகளும், உயிரியல் பிரிவில் 90 கேள்விகளும் இருக்கும். நீட் 2021 க்கான மொத்த மதிப்பெண்கள் 720.
நீட் கவுன்சிலிங்கில் பங்கேற்க நீட் கட்ஆஃப் மதிப்பெண் அவசியம். ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண்கள் கணக்கிட்டுக் கொள்ளலாம். தவறான விடைக்கு, ஒரு மார்க் மைனஸ் செய்திட வேண்டும். கேள்விக்கு விடையளிக்கவில்லை என கூறி எவ்வித மார்க் குறைக்கப்படாது.
நீட் மார்க் அறிய இந்த பார்முலா மிகவும் உபயோகமாக இருக்கும். நீட் 2021 மதிப்பெண் = (சரியான விடை * 4) – (தவறான விடை* 1)
பேஸ் 2 பதிவு கட்டாயம்
தேர்வு முடிவுகள் வெளியாகுவதற்கு முன்பு, விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வின் இரண்டு கட்ட ரெஜிஸ்ட்ரேஷன் பிராசஸை கட்டாயம் முடித்திட வேண்டும். மாணவர்கள் தங்கள் தரவை விரைவாகச் சமர்ப்பிக்க உதவுவதற்காக, இந்தாண்டு ரெஜிஸ்டர் செயல்முறை இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டப் பதிவின் போது நிரப்பப்பட வேண்டிய விவரங்களை மாணவர்கள் என்டிஏயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம். நீட் பேஸ் 2 பதிவை ரெஜிஸ்டர் செய்யாதோர்களின், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்ஆஃப் மார்க் கணக்கிடுவது மூலம் கவுன்சிலிங்கில் எந்த கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பதை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான நீட் கவுன்சிலிங் மருத்துவ ஆலோசனை குழுவும் (எம்சிசி), 85 சதவீத மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த மாநில அதிகாரிகள் நீட் கவுன்சிலிங்கை நடத்துகின்றனர்.