Advertisment

உங்களுக்குத் தெரியுமா? இந்த தேர்தலில் தான் ஒரு தொகுதிக்கு மட்டும் மூன்று கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது !

சதவிகிதம் முக்கியமில்லை... அமைதியாக தேர்தல் நடந்தாலே போதும் என்ற மனநிலையில் அனைவரும் உள்ளனர்.

author-image
Nithya Pandian
புதுப்பிக்கப்பட்டது
New Update
General Election 2019 Interesting Facts Anantnag Constituency

General Election 2019 Interesting Facts Anantnag Constituency

General Election 2019 Interesting Facts Anantnag Constituency :  2014ம் ஆண்டு இந்த தொகுதியில் தேர்தல் நடைபெற்ற போது, பதிவு செய்யபட்ட வாக்குகளின் சதவீதம் என்பது வெறும் 29% தான். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் இங்கு நடைபெற்ற கலவரங்களும், வன்முறைகளும் ஏராளம். பிரிவினைவாதிகளும் கலவரக்காரர்களும் இங்கு தேர்தலை புறக்கணிக்கின்றோம் என்று அறிக்கைவிட்டால், இந்த சதவீதத்தை எட்டுவதும் கடினம்.

Advertisment

General Election 2019 Interesting Facts Anantnag Constituency

சதவிகிதம் பிரச்சனையே இல்லை. அமைதியாக தேர்தல் நடந்தால் அதுவே வெற்றி தான் எங்கின்றார்கள் அரசியல் வல்லுநர்கள். காஷ்மீரில் அமைந்துள்ளது அனந்தநாக் தொகுதி. புல்வாமா, குல்காம், அனந்த்நாக், மற்றும் சோபியன் மாவட்டங்களில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய தொகுதியாகும் அனந்தநாக்.

இந்த ஒரு தொகுதிக்கு மட்டும் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கு முன்பு நடைபெற்ற எந்த தேர்தல்களிலும் இப்படி ஒரு தொகுதிக்காக மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றதில்லை.  ஏப்ரல் 23ம் தேதி அனந்த்நாக்கிலும், குல்காமில் 29ம் தேதியும், புல்வாமா மற்றும் சோபியனில் மே 6ம் தேதியும் தேர்தல் நடைபெற்றது.

கடந்த முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்றவர், முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதல்வரான மெகபூபா முஃப்தி. மொத்தம் பதிவான 29% வாக்குகளில் முதலிடம் பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானர். ஆனால் 2016ம் ஆண்டு, அனந்த்நாக் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், அன்றைய முதல்வருமாக இருந்த முஃப்தி முகமது சயீத் மரணமடைய, அந்த தொகுதியில் இருந்து சட்டசபை உறுப்பினராக வெற்றி பெற்றார் மெகபூபா முப்ஃதி. இதனால் அந்த தொகுதியின் எம்.பி. பதவியினை ராஜினாமா செய்ய நேர்ந்தது.

கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக எம்.பி.யே இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தொகுதி அது. 2017ம் ஆண்டு ஜனவரி மாதம்  பாஜகவின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது மெகபூபா முஃப்தியின் பிடிபி கட்சி. ஆனாலும் 2 வருடங்கள் கூட நீடிக்கவில்லை அந்த கூட்டணி. கடந்த வருடம் ஜூன் மாதம் 19ம் தேதி பாஜக  தங்களின் வாபஸினை விலக்கிக் கொள்ள, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மெகபூபா.

இம்முறை இங்கு மும்முனை தேர்தல் போட்டி நிலவி வருகிறது. பிடிபி சார்பாக மீண்டும் போட்டியிடுகிறார் மெகபூபா முஃப்தி. காங்கிரஸ் சார்பில் குலாம் அஹமது மிர் (ஜம்மு - காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்) மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பில் ஹஸ்நைன் மசூதி (ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி) இவர்கள் உட்பட 18 வேட்பாளர்கள் இங்கு போட்டியிட்டனர்.

இடைத்தேர்தல் ஏன் நடைபெறவில்லை ?

ஸ்ரீநகர் தொகுதியின் எம்.பியாக செயல்பட்டு வந்த தாரிக் முகமது கர்க்கா, ஜம்மு-காங்கிரஸ் பீப்பிள்ஸ் டெமாக்ரிடிக் கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு மாறினார். இதனால் அங்கு இடைத்தேர்தல் கொண்டு வரப்பட்டது. ஏப்ரல் 9, 2017ம் அன்று நடத்தப்பட்ட தேர்தலில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்தபட்ச வாக்குகளே (7.14%) பதிவானது.

அதனால் ஏப்ரல் 13ம் தேதி 38 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. ஆனால் அங்கு 7.13% வாக்குகளே பதிவானது. இதற்கிடையில் நடைபெற்ற பெரும் கலவரத்தில் 8 கலவரக்காரர்கள் கொல்லப்பட்டனர். அதனால் அனந்த்நாக் தொகுதியில் நடைபெற இருந்த தேர்தல் 2 நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

தேர்தல் நடந்தாலே ஆச்சரியம் தான் !

பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் முன்பு வரை, அனந்த நாக் தொகுதியானது பிடிபியின் கோட்டையாக கருதப்பட்டது. 2016-ல், ஹிஜ்புல் முஜாஹாதீன் தலைவன் புர்ஹான் வானியின் இறுதி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது இன்னும் பெரிய வலியை அம்மக்களுக்கு தந்து கொண்டு தான் இருக்கிறது. பெல்லட் குண்டுகள் மூலம் தாக்குதலுக்கு உள்ளான குழந்தைகளின் பார்வைகள் பறிபோன சோகமும் அங்கு அரங்கேறியது.

எந்தப்பக்கம் திரும்பினாலும், போராட்டங்களும், வன்முறைகளுக்குமான களமாக அமைந்திருக்கிறது அனந்தநாக் தொகுதி. நாளை காலையில் வந்து கலவரக்காரர்களும், பிரிவினைவாதிகளும் தேர்தலை புறக்கணிக்கின்றோம் என்றால், நிச்சயமாக அங்கு மக்கள் வாக்களிப்பது குறைந்துவிடும்.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து நடைபெற்ற வன்முறைகள் மற்றும் கலவரங்களில் உயிரிழந்தவர்களில் 80% பேர் இந்த நான்கு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தான்.

22 குடிமக்கள், 87 காவல்படையினர், மற்றும் 66 கலவரக்காரர்கள் உட்பட 169 பேர் இந்த தொகுதியில் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு காஷ்மீர் என்று பொதுவாக அழைக்கப்படும் இந்த தொகுதியில் நாளை தேர்தல் புறக்கணிக்கப்படுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.

பிப்ரவரி 14ம் தேதி, புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலில் 40 பாதுகாப்புப்படை வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளை மக்கள் வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே பயன்படுத்தப்பட முடியும் என்று சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஏற்கனவே தொடர் கலவரங்கள் காரணமாக சுற்றுலாத்துறை நலிவடைந்த நிலையில் வியாபாரிகளுக்கு பெரும் நட்டத்தை உருவாக்கும் சட்ட சிக்கலாக இது பார்க்கப்படுகிறது.

தூரு கோகேர்நாக், குல்காம், தேவ்சர், பஹல்காம் ஆகிய பகுதிகளில் இருந்து கணிசமாக வாக்களிக்க மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனந்த்நாக் மாவட்ட மக்கள் கடந்த தேர்தலில் 40% வாக்களித்தனர். இருப்பினும் இம்முறை பதியும் வாக்குகள் சதவிதத்தினை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க : ராகுல் காந்தி, மெகபூபா முஃப்தி, அமித் ஷா – பெரிய தலைவர்கள் களம் காணும் மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல்

Jammu And Kashmir Mehabooba Mufti General Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment