Advertisment

Election 2019: 'என் மைத்துனரை வைத்தே திமுக அரசியல் செய்யும் என கனவிலும் நினைக்கவில்லை' - அன்புமணி ராமதாஸ் வேதனை

General Election 2019: நோட்டுகளை வீசி கூட்டணி உருவாவதால் இதை பாமக பார்முலா என்று சொல்லத் தோன்றுகிறது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
Anbumani Ramadoss about his relative Vishnu Prasad comment on pmk - admk alliance - 'என் மைத்துனரை வைத்தே திமுக அரசியல் செய்யும் என கனவிலும் நினைக்கவில்லை' - அன்புமணி ராமதாஸ் வேதனை

Anbumani Ramadoss about his relative Vishnu Prasad comment on pmk - admk alliance - 'என் மைத்துனரை வைத்தே திமுக அரசியல் செய்யும் என கனவிலும் நினைக்கவில்லை' - அன்புமணி ராமதாஸ் வேதனை

General Election 2019: அதிமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த பாமக, மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது விமர்சனத்திற்கு உள்ளானது. இதுதொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்காக, சென்னை தி.நகர் பாண்டி பஜாரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று காலை அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சரமாரியாக பல கேள்விகளை முன் வைத்தனர்.

Advertisment

இதில் பல கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளித்த அன்புமணி, அதிமுக அரசின் ஊழல் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க சற்றுத் தடுமாறினார். சில கேள்விகளுக்கு அன்புமணி டென்ஷனாகி, 'இனி உங்களுக்கு பதில் சொல்ல முடியாது' , 'நாகரீகமாக நடந்து கொள்ளுங்கள்' என்றெல்லாம் செய்தியாளர்களிடம் சற்று கோபமாக நடந்து கொண்டார்.

மேலும் படிக்க - அதிமுக கூட்டணி ஏன்? சரமாரி கேள்விகளுக்கு அன்புமணி ராமதாஸ் பதில்

இறுதியாக, அன்புமணியின் மைத்துனர் விஷ்ணு பிரசாத், பாமக கூட்டணி குறித்து திடீரென கடுமையாக விமர்சித்தது பற்றி செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, உண்மையில் அன்புமணி உடைந்து போய் பதிலளித்தார்.

அதற்கு முன், சமீபத்தில் விஷ்ணுபிரசாத் பாமகவை என்ன சொல்லி விமர்சித்தார் என்பதை பார்க்கலாம்.

அதிமுக - பாமக கூட்டணி குறித்து அன்புமணியின் மைத்துனரும் காங்கிரஸ் செயல்தலைவருமான விஷ்ணுபிரசாத் சமீபத்தில் அளித்த பேட்டியில், "அதிமுகவை மிகக் கேவலமான வார்த்தையில் அர்ச்சித்த ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரை அவர்கள் பாணியிலேயே வெட்கம் கெட்டவர்கள் என்றுதான் தெரிவிக்க வேண்டும். மேலும், தற்போது நோட்டுகளை வீசி கூட்டணி உருவாவதால் இதை பாமக பார்முலா என்று சொல்லத் தோன்றுகிறது. இந்த பார்முலாதான், அதிமுக - பாமக கூட்டணியின் பின்னணியில் இருக்கிறது. மேலும் மெரிட் இல்லாமல் பேமன்ட் கோட்டாவில் கூட்டணி உருவாக்கியுள்ளது. இதைத் தவிர்த்து 10 கோரிக்கையின் அடிப்படையில் கூட்டணி வைத்துள்ள ராமதாஸ், 11வது கோரிக்கையாக பேரம் பேசியது தொடர்பாக தெரிவித்திருந்தால் ஆரோக்கியமானதாக இருந்திருக்கும்" என்று விஷ்ணு பிரசாத் விமர்சித்து இருந்தார்.

இந்த கேள்விக்கு இன்று பதிலளித்த அன்புமணி, "விஷ்ணு பிரசாத்தை எனக்கு 30 ஆண்டுகாலமாக தெரியும். என்னுடன் ஒன்றாக படித்தவர். எனது மூன்று பிள்ளைகளுக்கும் அவர் மடியில் வைத்து தான் காது குத்தினோம். திமுக மூலம் தான் அவர் இப்படி பேசியதாக எனக்கு தகவல் கிடைத்தது. கலைஞர் கருணாநிதி அவர்கள் இருந்தவரை, துரைமுருகன், வீரமணி ஆகியோரை கொண்டு தான் பாமகவை விமர்சிப்பார். ஆனால், இப்போது திமுக ஒருபடி மேலே சென்று, எனது உறவினரை வைத்தே எங்களுக்கு எதிராக பேச வைத்திருக்கிறது. ஒரு எம்.பி. சீட்டுக்காக 30 ஆண்டுகால உறவை மறந்து, விஷ்ணுபிரசாத் இப்படி விமர்சிப்பார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. குறிப்பாக, எனது மனைவி தான் இந்த விஷயத்தில் மிகவும் வேதனை அடைந்தார்" என்று சொல்லி வேறு எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் விறுவிறுவென ராமதாஸ் எழுந்து சென்றுவிட்டார்.

மேலும் படிக்க - Election 2019: 'கூட்டணி வேறு; கொள்கை வேறு' - பாமக கூட்டணி குறித்து முதல்வர் பழனிசாமி

Aiadmk Anbumani Ramadoss Pmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment