தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. தேர்தல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பகுதிகளில் காவல்துறையினர், துணை ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட பி.கே புரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினராக, தலைமைப் பெண் காவலர் மாலதி, மத்திய படை காவலர் மனோஜ், ஒளிப்பதிவாளர் பிரகாஷம் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், நேற்று குடியாத்தம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்த பறக்கும் படையினரின் கார் மீது, எதிர்பாராத விதமாக காட்பாடியை நோக்கி சென்றுக் கொண்டிருந்த லாரி மோதியதில், கார் தலைகீழாக விழுந்தது.
விபத்தில், தலைமைப் பெண் காவலர் மாலதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரோடு பயணித்த காவலர் மனோஜ் மற்றும் ஒளிப்பதிவாளர் பிரகாஷம் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து, அவர்கள் மூவரும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட பின், கே.வி.குப்பம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil