Congress Woman Khushbu Sundar Avoids Campaign : காங்கிரஸ் கட்சியில் சிறிது தினங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் சேர்ந்தார். சேர்ந்த இரண்டே நாட்களில் நேரடியாக ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்டார். அதன் பின்பு வெளியான காங்கிரஸ் அறிக்கையின் படி, ஊர்மிளா மடோன்கர் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது உறுதியானது.
போட்டியிட வாய்ப்பளிக்காததால் பிரச்சாரத்தை தவிர்க்கும் குஷ்பு
ஆனால் தமிழகத்தில் நன்கு பரீட்சையமான முகமாய் வலம் வரும் குஷ்புவிற்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 4 வருடங்களுக்கு முன்பு குஷ்பு, திமுகவில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கொண்டார். 2016ம் ஆண்டு அவருக்கு சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டது.
தற்போது திமுக + காங்கிரஸ் கூட்டணியில், காங்கிரஸ் கட்சியின் 10 தொகுதியில் எங்கும் குஷ்புவிற்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை. திருச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்ட போதும், அவருக்கு பதிலாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் திருநாவுக்கரசை தேர்வு செய்தது காங்கிரஸ் தலைமை.
மேலும் நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலும் 29வது இடத்திற்கு தள்ளப்பட்டார் குஷ்பு. முக்கியத்துவம் குறைந்துவிட்டது என்று எண்ணிய குஷ்பு தற்போது பிரச்சாரங்களுக்கும் தலை காட்டாமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ராகுல் காந்தி வயநாட்டை தேர்வு செய்ய ராஜீவ் காந்தி தான் காரணமா? நெகிழ வைக்கும் பின்னணி!