Advertisment

விஐபி தொகுதி: திருவண்ணாமலையில் திமுகவின் எ.வ.வேலு 96,234 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

திருவண்ணாமலை தொகுதியில், தொடர்ந்து பலம் வாய்ந்தவராக இருக்கும் திமுகவின் எ.வ.வேலுவும் முதல்முறையாக தேர்தல் களம் காணும் தணிகைவேல் நேரடியாக மோதுகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil nadu assembly elections results, dmk winning status, தேர்தல் ரிசல்ட், தேர்தல் முடிவுகள், திமுக வெற்றி முடிவுகள், அதிமுக வெற்றி முடிவுகள், முக ஸ்டாலின், aiadmk election result, dmk vote countin reading, ev velu, mk stalin, dmk elections results, dmk, திருவண்ணாமலை, thiruvannamalai, kolathur,

திமுகவில் செல்வாக்கு மிக்க தலைவராக வலம் வரும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக உள்ளார். திருவண்ணாமலை தொகுதியில் தொடர்ந்து 2முறை எம்.எல்.ஏவாக இருக்கிறார். எ.வ.வேலு போட்டியிடும் திருவண்ணாமலை தொகுதி விஐபி தொகுதியாக கருதப்படுகிறது.

Advertisment

அதிமுக கூட்டணியில் திருவண்ணாமலை தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் பாஜக சார்பில் தணிகைவேல் போட்டியிடுகிறார். தணிகைவேல் திருவண்ணாமலையைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் சென்னையில் செட்டில் ஆனவர். தேர்தல் பிரமாணப் பத்திரத்திலும் சென்னை முகவரிதான் கொடுத்துள்ளார். சினிமா பைனான்ஸியர் தொழில் செய்யும் தணிகைவேல் பொருளாதார ரீதியாக பலமானவர்தான் என்றாலும் எ.வ.வேலுவுடன் ஒப்பிடும்போது பலம் குறைவுதான். திருவண்ணாமலை தொகுதியில் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லை என்றாலும் இங்கே கூட்டணி கட்சியான அதிமுகவை நம்பியே களம் இறங்கியுள்ளது.

2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட எ.வ.வேலு 1,16,484 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.ராஜன் 66,136 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் எ.வ.வேலு 50,348 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

திருவண்ணாமலை தொகுதியில், தொடர்ந்து பலம் வாய்ந்தவராக இருக்கும் திமுகவின் எ.வ.வேலுவும் முதல்முறையாக தேர்தல் களம் காணும் தணிகைவேல் நேரடியாக மோதுகின்றனர். இவர்களுடன் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ப.கோதண்டபாணி, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் இரா.அருள், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெ.கமலக்கண்ணன் உள்பட மொத்தம் 15 வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். திருவண்ணாமலையில் வாகை சூடப்போவது எ.வ.வேலுவா? அல்லது தணிகைவேல்-ஆ? என்பது வாக்கு எண்ணிக்கை முடிவில் காணலாம்.

திருவண்ணாமலை தொகுதியில் முதல் சுற்றில் தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு முன்னிலை வகித்து வருகிறார்.

மின்னணு வாக்குகள் எண்ணப்பட்டதையடுத்து, திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு 40,862 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

திருவண்ணாமலை தொகுதியில் இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு பாஜக வேட்பாளர் தணிகைவேலை விட 96,234 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Dmk Thiruvannamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment