Advertisment

திமுக வெற்றி; அதிமுக வலுவான எதிர்க்கட்சி: உணர்த்துவது என்ன?

அதிமுக வலுவான எதிர்க்கட்சிகள் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. கடந்த தேர்தலில் 90-க்கும் மேல் சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட திமுக வை வலுவான எதிர்க்கட்சியாக பார்க்கலாம். தற்போது வலுவான எதிர்க்கட்சி என்று ஒன்று இல்லை.

author-image
Gokulan Krishnamoorthy
New Update
திமுக வெற்றி; அதிமுக வலுவான எதிர்க்கட்சி: உணர்த்துவது என்ன?

TamilNadu Assembly Election Results 2021 : நாடே எதிர்பார்த்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று வருகிறது. பல தொகுதிகளில் வெற்றி அறிவிப்பு வெளியாகி வரும் நிலையில், சில தொகுதிகளில் தாமதமாகி உள்ளது. இருப்பினும், தற்போதைய நிலவரப்படி, தனிப் பெரும்பாண்மையுடன் பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம்.

Advertisment

இரண்டு முறை ஆட்சியில் இருந்த அதிமுக பல இடங்களை தோல்வியை தழுவி, ஆட்சியை இழந்திருக்கிறது. இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் மூலம், திமுக வெற்றி, அதிமுக வலுவான எதிர்க்கட்சி என்ற காரசார அரசியல் சலசலப்புகள் தொடங்கி இருக்கின்றன. இந்த சலசலப்புகளுக்கு மத்தியில் அரசியல் விமர்சகர்கள், கட்சியினர் என சிலரிடம் பேசினோம்.

பாசிச பாஜக வை கூட்டணியில் சேர்த்துள்ள அதிமுக நிச்சயம் தோல்வியை தழுவும் என நம்மிடம் பேசத் தொடங்கிய தமிழர் விடுதலை கொற்றத்தின் தலைவர் அ.வியனரசு, திமுக வின் இந்த வெற்றி எதிர்பார்க்கப்பட்டது தான். இது வியப்பிற்கு உரிய வெற்றி இல்லை. பத்தாண்டுகளுக்கு பிறகு ஆட்சிக் கட்டிலில் அமற காத்திருக்கும் திமு கழகத்திற்கு மகிழ்ச்சியான தருணம் தான் இது. திமுக தொண்டர்கள் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொண்டது போல, தமிழக மக்களும் ஸ்டாலினை ஏற்றுக் கொண்டதாகவே, தேர்தல் முடிவுகள் ஊடாக நாம் அறிந்து கொள்ளும் செய்தி. இருப்பினும், எல்லாம் பணநாயகம் தான். பண நாயகத்திற்குள் ஜனநாயகம் தலைத்திருப்பதை இந்த தேர்தல் உணர்த்துகிறது.

publive-image

தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க காத்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சரவையில், கூட்டணி குளறுபடிகள் இல்லாமல் இருக்கும் சூழல் ஆரோக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.

திமுக தற்போது பெற்றிருக்கக் கூடிய வெற்றியை மிகப் பெரிய, வியப்படைவதற்கான வெற்றியாக கருதி விட முடியாது. அதிமுக வை பொறுத்த வரையில், ஜெயலலிதா இல்லாத சூழல், அதிமுக பல அணிகளாக உடைந்துள்ள நிலை என பல்வேறு அரசியல் காரணிகளை கடந்து, எடப்பாடி பழனிச்சாமி பெற்றிருக்கக் கூடிய வெற்றி, அவரை அதிமுக வின் வலுவான தலைவராக அங்கீரிக்கப்பட்டுள்ளதாகவே கருத வேண்டும். இருப்பினும், அமமுக வாக்குகளை பிரித்ததன் காரணமாக பல தொகுதிகளில் அதிமுக வின் வெற்றி பாதிக்கப்பட்டதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அமமுக சார்பில் தினகரன் வெற்றிப் பெற்றிருந்தாலும், பயனற்றதாகவே பார்க்க வேண்டும்.

கடந்த இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்று என்ன செய்தார் தினகரன் என, நம்மிடம் கேள்வி எழுப்பினார். சசிகலா தேர்தல் அரசியலில் இருந்து விலகியதை போல, தினகரனும் விலகிக் கொள்ளலாம். எம்.ஜி.ஆர் மறைவை அடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜெ, ஜா அணிகளாக தேர்தல் களம் கண்ட அதிமுக, ஜெ தலைமையிலான கட்சிக்கு மக்கள் ஆதரவு இருந்ததால், ஜானகி விலகிக் கொண்டதை போல, தினகரனும் விலகிக் கொள்ளலாம். அதிமுக வை கைப்பற்ற வேண்டிய அவசியம் இனி தினகரனுக்கும் சசிகலாவுக்கும் இல்லை.

தொடர்ந்து பேசிய வியனரசு, நாடாளுமன்றத் தேர்தலில், திமுக 39 தொகுதிகளுக்கு 38-ல் வெற்றி பெற்றது என்றாலும் கூட, டெல்லி யாருக்கு என்ற நிலை வரும் போது, மோடிக்கு எதிரான அலையே பிரதிபலித்தது. தற்போதைய தேர்தல் முடிவுகளில், அதிமுக தோல்வியடைந்ததற்கும் கூட்டணியில் பாஜக இடம்பெற்றிருப்பதை முக்கிய காரணங்களும் ஒன்றாக எடுத்துக் கொள்ளலாம். மேலும், மக்களின் வாக்களிக்கும் அணுகுமுறையானது மக்களைவைக்கு வேறு, சட்டப்பேரவைக்கு வேறு என்பதையும் காரணமாக கருதலாம். ஜனநாயக கட்டமைப்பில் வலுவான எதிர்க்கட்சி அமைவது அவசியம் தான். தவறுகளை தட்டிக் கேட்பதற்கும், சுட்டிக்காட்டுவதற்கும் அதிமுக வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்திருப்பது, மக்களின் நல்ல முடிவை காட்டுகிறது.

திருவைகுண்டம், திருவாரூர், திருவொற்றியூர் போன்ற தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி தோல்வியை நாம் தமிழர் கட்சி தீர்மானித்திருப்பது, மிகவும் வியப்பான செய்தி. நாம் தமிழர் கட்சி, பெரும்பாலான இடங்களில் மூன்றாம் இடம் பிடித்திருப்பது, திராவிட அரசியலுக்கு மாற்றான தமிழ் தேசிய அரசியலை நோக்கி மக்கள் செல்வதை உணர்த்துகிறது. பிரசாந்த் கிஷோர் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பணிபுரியவில்லை என்றாலும், திமுக வெற்றிப் பெற்றிருக்கும். ஐபேக் அணிக்கு செலவளித்த தொகை வீண் என்றார்.

வியனரசுவை தொடர்ந்து, வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான தமிழ்வேந்தனிடம் பேசினோம். ‘பாஜக மீதான மிகப் பெரும் வெறுப்பு, தற்போது வெளியாகி உள்ள தேர்தல் முடிவுகளில் எதிரொலித்துள்ளது. கொரோனா பொதுமுடக்க காலங்களில் மக்கள் பொருளாதார பின்னடைவில் இருந்த தருணங்களில், வெற்றி நடை போடுகிறோம் என்ற அதிமுக வின் அலப்பறையும் பெரும் தோல்விக்கு காரணம். மேலும், மத்திய பாஜ கட்சிக்கு கைப்பாவைகளாக இருக்கும் அதிமுக வுக்கு தங்களுடைய ஆதரவு இருக்கக் கூடாது என மக்கள் முடிவெடுத்ததும் இந்த தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்துள்ளது.

publive-image

சசிகலா மீதான அதிமுக வின் வெறுப்புணர்வை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளாததும், அதிமுக வின் தோல்விக்கான காரணமாக பார்க்கலாம். அதிமுக, அமமுக, சசிகலா இணைந்து தேர்தலை சந்தித்திருந்தால் நிச்சயம் பெருவாரியான இடங்களில் அதிமுக வெற்றிப் பெற்றிருக்கும். மேலும், அதிமுக வின் தோல்லிக்கு பல இடங்களில் காரணமான நாம் தமிழர் பெற்ற வாக்குகள் காரணமாகி இருக்கின்றன. மக்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பதை தீர்மாணித்துள்ளார்கள் என்பதால் தான், சீமான் சுமார் 48000 வாக்குகள் பெற்றுள்ளார்.

அதிமுக வலுவான எதிர்க்கட்சிகள் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. கடந்த தேர்தலில் 90-க்கும் மேல் சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட திமுக வை வலுவான எதிர்க்கட்சியாக பார்க்கலாம். தற்போது வலுவான எதிர்க்கட்சி என்று ஒன்று இல்லை. எதிர்வரும் சூழலில் பாஜக - அதிமுக கூட்டணியே கேள்விக் குறி தான். எடப்பாடி பழனிசாமியை அதிமுக வின் அதிகாரம் மிக்க தலைவராக கருதிவிட முடியாது. தற்போது, பழனிச்சாமியுடன் இணைந்திருக்கும் பன்னீர் செல்வம், நாளைக்கே சசிகலா பக்கம் சென்றால், பழனிச்சாமியின் அஸ்திவாரம் ஆட்டம் காணும். கேரளா, மேற்கு வங்கம் மற்றும் தமிழக வெற்றி நிலவரங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் பாஜக வுக்கு எதிரான அலையை தெளிவாக உணரலாம்’, என்றார்.

ஆட்சியமைக்க காத்திருக்கும் திமுக சார்பில், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவிடம் பேசினோம். ‘திமுக சார்பில் எதிர்பார்த்த முடிவுகள் தான் தற்போது வெளியாகி உள்ளது. மாநில சுயாட்சியினை அடகு வைத்து, கடந்த பத்தாண்டு காலமாக நடைபெற்று வரும் அவல ஆட்சியை மக்கள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்கள். தங்களது சொந்த வளங்களை செழிப்பாக்கி கொண்ட அதிமுக பிரமுகர்கள் தோல்வியை தழுவினர். நாடாளுமன்றத் தேர்தலையும், சட்டமன்றத் தேர்தலையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியமில்லை.

publive-image

தேர்தல் முன்னனி நிலவரங்களே வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில், திமுக வின் மிக எளிய, அடையாளம் தெரியாத புதுமுக வேட்பாளர்கள் அதிமுக அமைச்சர்களை பலரை வீழ்த்தி வெற்றிக் கண்டுள்ளனர். இந்த வெற்றியை மக்களுக்கான வெற்றியாக பார்க்கலாம். திமுக வின் இந்த வெற்றி தமிழ்நாட்டு மக்களுக்கான விடியல் தான்’, என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Edappadi K Palaniswami Tn Assembly Elections 2021 Dmk Leader Stalin Election Result
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment