CM Edappadi K Palaniswamy Statements in Lok Sabha Election 2019: நாடே, யார் அடுத்த பிரதமர் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தருணம் இது. பாஜகவே மீண்டும் ஆட்சியை தக்க வைக்கப் போகிறதா, அல்லது காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுமா, அல்லது மூன்றாவதாக ஏதாவது அணி உருவாகி அதன் தலைமையில் ஆட்சி அமையுமா? என்று பல கேள்விகள் றெக்கை கட்டி பறக்கின்றன. வரும் 23ம் தேதி இதற்கான விடை கிடைத்துவிடும். இந்த கேப்பில், தமிழக அரசியல் களத்தில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பாப்போம். குறிப்பாக, நவீன தொழில்நுட்ப மைக் அணிந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்த தேர்தல் பிரச்சாரத்தில் அவர் வீசிய 'பன்ச்'கள் சிலவற்றை பார்ப்போம். எல்லாமே, 'ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்-ரா' வகையறா தான்!.
'இந்தியா முழுவதும் எத்தனையோ தேசியத் தலைவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் 130 கோடி மக்கள் இருக்கிறார்கள். ஆனால், அதில் பிரதமராக வருவதற்கு தகுதி கொண்டவராக எங்கு பார்த்தாலும் மோடிதான் தெரிகிறார்'.
'தீவிரவாதிகளை வேரோடு, கூண்டோடு அழிக்கக்கூடிய சக்தி பிரதமர் நரேந்திர மோடிக்குத்தான் இருக்கிறது. எனவே நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதற்காகவே இத்தேர்தலில் அதிமுக கூட்டணி வைத்துள்ளது'.
'ஸ்டாலின் இந்த ஆட்சியையே அன்னைக்கு கலைக்க பார்த்தார். சட்டப்பேரவையில் நீங்களே பாத்திருப்பீங்களே! என்னா ஆட்டம் ஆடினார் தெரியுமா? என்னுடைய பெஞ்ச் மேல ஏறி ஆட்டம், பாட்டம்தான்! பெண் அமைச்சர் பெஞ்ச்சில் ஏறி நின்று டான்ஸ் ஆடினார். இவங்களா நாட்டை காப்பாத்த போறாங்க?'.
'ஸ்டாலின் உழைப்பால் உயரவில்லை; உழைத்திருந்தால் கஷ்டம் தெரியும்'.
'தேர்தல் நேரத்தின் போது பல கட்சிகள் வரும். வாக்கு உறுதிகள் கொடுப்பார்கள். ஆனால் அ.தி.மு.க., மட்டுமே கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும்'.
'கருணாநிதி வாய் பேசாத நிலையில்கூட ஸ்டாலினை தலைவராக்கவில்லை. ஏன் என்றால், தந்தைக்கே மகன் மீது நம்பிக்கை இல்லை. பிறகு ஸ்டாலினை மக்கள் எவ்வாறு நம்புவார்கள்?'.
'திமுக கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. சமயம் கிடைக்கும்போதெல்லாம் கூட்டணி சேர்ந்துக்குவாங்க. உதாரணத்துக்கு வைகோ. எங்கிருந்து பிரிந்து போனாரோ, திரும்பவும் அங்கேயே கூட்டணி சேர்ந்திருக்கிறார். அவர் அங்க சேர்ந்தது நமக்கு நல்லதுதான். ஏன்னா.. அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய ராசியாக இருக்கும். கூட்டணிக்கும் அவர் ரொம்ப ராசியானவர்'.
'ஸ்டாலின் 25 வயது இளைஞர் போல், செல்லும் இடங்களில் கறுத்து போய் விட்டேன் என்று கூறி வருகின்றார். இதனை எம்.ஜி.ஆர்., கூட சொன்னது கிடையாது. இங்கு கோமாளியாக வேஷம் போட்டு சுற்றி வருகின்றார். இந்தியாவிலேயே ஷூ போட்டுக் கொண்டு ஏர் உழுதவர் ஸ்டாலின் தான்'.
'தி.மு.க.வினரின் அராஜகம் நாடறிந்த ஒன்று. பிரியாணி கடை, புரோட்டா கடை என அனைத்து கடைகளிலும் தகராறு செய்பவர்கள் அவர்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அராஜகம்தான் தலைவிரித்தாடும். ஆனாலும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். தி.மு.க.வால் மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியாது'.
'பொய் சொல்வதற்கான நோபல் பரிசை ஸ்டாலினுக்கு கொடுக்கலாம்'.
'ஸ்டாலின் ஒரு வைரஸ் கிருமி மாதிரி. செடிக்கு எப்படி பூச்சிக்கொல்லியை தெளித்து கட்டுப்படுத்துவோமோ, அதே போல் ஸ்டாலினுக்கு மருந்து தெளித்து இந்தத் தேர்தலோடு அவரது சகாப்தம் முடிவுக்கு வர அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்க வேண்டும்'.
'தந்தையின் ஆதரவில் கொள்ளைப் புறம் வழியாக அரசியலுக்கு வந்த ஸ்டாலின், மரியாதை கொடுத்து பேசினால் மரியாதை கிடைக்கும்; நான் திருப்பி பேசினால் ஸ்டாலினின் காது சவ்வு கிழிந்துவிடும்'.
எக்ஸிட் போல் வெளியான பிறகு முதல்வர் அளித்த பேட்டி,
'இது கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு; தமிழகத்தில் கருத்துக் கணிப்பு பொய்யாகும்; தேசிய அளவில் எனக்கு தெரியாது'.
ஒரு ஆக்ஷன் படம் பார்த்த ஃபீல் வருகிறதா!!