அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் ? வெளியானது முதற்கட்ட பட்டியல்!

முதற்கட்டமாக 9 சட்டசபைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார் தினகரன். 

Election 2019 AMMK Candidates List : வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், 40 தொகுதிகளில் போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்கும் பணி மும்பரமாக நடைபெற்று வருகிறது. தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார் டிடிவு தினகரன்.

முதற்கட்டமாக வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில் 24 நாடாளுமன்ற தொகுதியில் நிற்கும் வேட்பாளர்கள் பெயர்களையும், 9 சட்டமன்ற தொகுதியில் நிறுத்தப்பட இருக்கும் வேட்பாளர்கள் பெயர்களையும் அறிவித்துள்ளனர்.  அமமுக கட்சியின் தோழமை கட்சியான எஸ்.டி.பி.ஐ கட்சி, மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுகின்றது.

Election 2019 AMMK Candidates List

அதே போல் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடைபெற இருப்பதால் அதில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் பட்டியலையும் அமமுக வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார் தினகரன்.

மேலும் படிக்க : Election 2019 Candidates List Live Updates : சூடு பிடிக்கும் தேர்தல் களம்… வரிசையாக வேட்பாளர்களை அறிவிக்கும் கட்சிகள்!

இன்று மாலைக்குள் திமுக சார்பில் களம் காணும் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகிவிடும் என்பதால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Election news in Tamil.

×Close
×Close