Advertisment

வேட்பாளர் அறிவிப்பில் முந்திய திமுக அணி: இடதுசாரிகள், முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் விவரம்

Election 2019 DMK - ADMK Seat Sharing Announcement Live Updates : திமுக- அதிமுக தீவிரமாக வேலை பார்க்கிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Election 2019

Election 2019

Election 2019 DMK - ADMK Announcement Live Updates : வரும் ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலுக்காக திமுக- அதிமுக தீவிரமாக வேலை பார்க்கிறது.

Advertisment

2019 தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்திருந்தது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள முன்னணி கட்சிகள் விறுவிறுப்பாக வேலைப் பார்த்து வருகிறது. திமுக மற்றும் அதிமுக தலைமையில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதிமுக-வில் தொகுதி ஒதுக்கீடு பணிகள் நேற்று நடைபெற்று வந்த நிலையில், ஒரு சில முக்கிய தகவல்கள் மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு விவரங்கள் இன்று வெளியானது.

dmk alliance 2019 in tamil, திராவிட முன்னேற்றக் கழகம்

Election 2019 DMK - ADMK Live Updates : திமுக அதிமுக தொகுதி ஒதுக்கீடு

6:10 PM: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் திருப்பூர் தொகுதிக்கு சுப்புராயனையும், நாகப்பட்டினம் தொகுதிக்கு செல்வராசையும், நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களாக இந்திய கட்சியின் மூத்தத் தலைவர் நல்லக்கண்ணு அறிவித்துள்ளார்.

5:50 PM: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எஸ்.டி.பி.ஐ கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறோம் - டி.டி.வி.தினகரன்.

5:45 PM: சசிகலா சம்பந்தப்பட்ட யாருடனும் கூட்டணி இல்லை என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தான் தனித்துப் போட்டியிடுவதாகவும், ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

5:15 PM: மாநிலத் தலைவராகவே இருந்தாலும், கட்சித் தலைமை அறிவித்தப் பிறகு தான் நான் வேட்பாளரா இல்லையா என்பதை சொல்ல முடியும். கட்சித் தலைமை யாரை வேண்டுமானாலும் அறிவிக்கலாம். ஆனால் அது யாராக இருந்தாலும், தி.மு.க சார்பில் கனிமொழியே நின்றாலும் கூட அதை எதிர்க்கும் துணிவு பா.ஜ.க-வுக்கு இருக்கிறது என்பதை தெளிவுப் படுத்துகிறேன். வெற்றிப் பெற போவது நாங்கள் தான் என்பதையும் தெளிவாக சொல்ல முடியும். - தமிழிசை

5:10 PM: கை விடப்பட்ட மதுரையை தொழில் நகரமாக மாற்றி, புதிய தொழில்களில் களம் காணவும், மதுரையை முன்னேற்றவும் பாடுபடுவேன் என மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மதுரையில் போட்டியிடும் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

4:15 PM: மூன்று நாட்களில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுமென தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

3:15 PM:மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மதுரையில் எழுத்தாளர் சு.வெங்கடேசன், கோவையில் பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார்கள். இந்தத் தகவலை சென்னையில் அந்தக் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அதிகாரப்பூர்வ அறிவித்தார்.

தேர்தல் 2019 : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு

2:45 PM: மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ராமநாதபுரத்தில் நவாஸ் கனி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

2:00 PM: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல்காந்தி நிகழ்ச்சியை அனுமதித்தது எப்படி? என விசாரிக்க கல்லூரிக் கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

1:45 PM: ‘பொள்ளாச்சி விவகாரத்தில் ஆளுங்கட்சி மீதான குற்றச்சாட்டை திசைதிருப்ப சபரீசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். பொள்ளாச்சி பாலியல் கொடூர விவகாரம் மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் அவர் கூறினார்.

1:15 PM: திமுக கூட்டணிக் கட்சிகளின் அதிகாரபூர்வ தொகுதி மீண்டும் ஒரு முறை பட்டியலாக:

திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் தொகுதி இறுதிப் பட்டியல்:

திமுக 

1.தூத்துக்குடி

2.தென்காசி

3.நெல்லை 4.திண்டுக்கல்

5.தர்மபுரி

6.பொள்ளாச்சி 7.சேலம்

8.அரக்கோணம்

9.மயிலாடுதுறை 10.தஞ்சாவூர்

11.கடலூர்

12.ஸ்ரீபெரும்புதூர் 13.திருவண்ணாமலை 14.கள்ளக்குறிச்சி 15.காஞ்சிபுரம்,

16.நீலகிரி

17.வேலூர்

18.தென் சென்னை

19.மத்திய சென்னை

20.வட சென்னை.

காங்கிரஸ்

1.கன்னியாகுமரி

2.விருதுநகர்

3.சிவகங்கை, 4.தேனி,

5.திருச்சி,

6.கரூர்,

7.கிருஷ்ணகிரி, 8.ஆரணி

9.திருவள்ளுர்

10.புதுவை.

மதிமுக

1.ஈரோடு

விடுதலைச் சிறுத்தைகள்

1.சிதம்பரம் 2.விழுப்புரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

1.மதுரை

2.கோவை

இந்திய கம்யூனிஸ்ட்

1. நாகப்பட்டினம்

2.திருப்பூர்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

1.இராமநாதபுரம்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

1.நாமக்கல்

இந்திய ஜனநாயக கட்சி

1.பெரம்பலூர்.

12.48 PM :  ஐ.ஜே.கே மற்றும் கொ.ம.தே.க போட்டி

பெரம்பலூர் இந்திய ஜனநாயக கட்சியும் மற்றும் நமக்கல் தொகுதியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும்.

12.43 PM :  விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டி

விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய 2 தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும்

12.43 PM :  இந்திய முஸ்லீம் லீக் கட்சி போட்டி

ராமநாதபுரம் தொகுதியில் இந்திய முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும்.

12.43 PM :  கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டி

மதுரை மற்றும் கோவை ஆகிய 2 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் மற்றும் நாகை ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடும்.

12.36 PM :  மதிமுக போட்டி

ஈரோடு தொகுதியில் மதிமுக போட்டியிடும்.

12.36 PM :  காங்கிரஸ் போட்டி

திருவள்ளூர், விருதுநகர், சிவகங்கை, தேனி, புதுச்சேரி, கிருஷ்ணகிரி, ஆரணி, திருச்சி, கரூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும்.

12.36 PM :  திமுக போட்டி

வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புத்தூர், வேலூர், அரக்கோணம், நீலகிரி தனித்தொகுதி, பொள்ளாச்சி, திண்டுக்கல், தஞ்சை, தென்காசி, திருநெல்வேலி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, தூத்துக்குடி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

12.00 PM :  இரட்டை இலை சின்னம் வழக்கு

இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவளித்தது.

11.30 AM :  திமுக தொகுதி அறிவிப்பு

திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் சற்று நேரத்தில் வெளியிடப்படுவதால் கூட்டணி கட்சி தலைவர்கள் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை

11.25 AM :  3 தொகுதிகளின் இடைத்தேர்தல் எப்போது ?

அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தவேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கில், 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.

10.30 AM : அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

9.30 AM : தஞ்சையில் த.மா.கா

அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் தமாகா-வுக்கு தஞ்சை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

9.00 AM : காங்கிரஸ் கட்சி தொகுதிகள்

திமுக-வில் காங்கிரஸ் கட்சிக்கான 9 தொகுதிகள் எவை, எவை என்பதை அடையாளம் காண்பது குறித்து இரு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் காங்கிரஸ் தவிர பிற கூட்டணி கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு விவரம் இன்று வெளியாகும் எனத் தெரிகிறது

Dmk Aiadmk General Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment