Advertisment

Election 2019: தி.மு.க - பா.ம.க நேரடியாக மோதும் தொகுதிகள் இவை தான்!

தர்மபுரி – டாக்டர். அன்புமணி ராமதாஸ் (பா.ம.க) - டாக்டர் எஸ்.செந்தில்குமார் (தி.மு.க)

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Election 2019: DMK Vs PMK

General Election 2019: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை தேர்வு செய்து, இறுதி பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் முதற் கட்டமாக 5 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் பா.ம.க. மொத்தம் 7 தொகுதிகளைப் பெற்றுள்ள அக்கட்சி தற்போது மீதமுள்ள இருவரின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

Advertisment

தர்மபுரி – டாக்டர். அன்புமணி ராமதாஸ், விழுப்புரம் – வடிவேல் இராவணன், அரக்கோணம் – ஏ.கே. மூர்த்தி, மத்திய சென்னை – சாம் பால், கடலூர் – டாக்டர். கோவிந்தசாமி, என முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருந்தது. தற்போது ஸ்ரீபெரும்புதூரில் வைத்திலிங்கமும், திண்டுக்கல்லில் ஜோதி முத்துவும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் விழுப்புரம் தவிர்த்து மற்ற 6 தொகுதிகளில் பா.ம.க - தி.மு.க நேரடியாக மோதுகிறது. டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க 2 இடங்களில் பா.ம.க-வை எதிர்த்து நிற்கிறது.

அதன் விபரங்கள் பின் வருமாறு:

தர்மபுரி – டாக்டர். அன்புமணி ராமதாஸ் (பா.ம.க) - டாக்டர் எஸ்.செந்தில்குமார் (தி.மு.க)

அரக்கோணம் – ஏ.கே. மூர்த்தி (பா.ம.க) - எஸ். ஜெகத்ரட்சகன் (தி.மு.க)

மத்திய சென்னை – சாம் பால் (பா.ம.க) - தயாநிதி மாறன் (தி.மு.க)

கடலூர் – டாக்டர். கோவிந்தசாமி (பா.ம.க) - டி.ஆர்.பி.எஸ். ஸ்ரீரமேஷ் (தி.மு.க)

ஸ்ரீபெரும்புதூர் - வைத்திலிங்கம் (பா.ம.க) - டி.ஆர்.பாலு (தி.மு.க) - தாம்பரம் நாராயணன் (அ.ம.மு.க)

திண்டுக்கல் - ஜோதி முத்து (பா.ம.க) -  ப. வேலுச்சாமி (தி.மு.க)

விழுப்புரம் தொகுதியை கூட்டணிக் கட்சியான வி.சி.க-வுக்குக் கொடுத்திருக்கிறது தி.மு.க. அங்கு பா.ம.க-வின் வடிவேல் இராவணனுடன் வி.சி.க-வின் ரவிக்குமார் மோதுகிறார். அ.ம.மு.க-வில் வானூர் என்.கணபதி போட்டியிடுகிறார்.

டி.டி.வி தினகரன் முதற்கட்டமாக 24 நாடாளுமன்ற வேட்பாளர்களை மட்டும் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Dmk Pmk General Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment