Advertisment

Tamil Nadu By Election: 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு நியமனம்! வேட்பாளர் அறிவிப்பு விரைவில்

ஏற்கனவே நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Today Live

Tamil Nadu News Today Live

Tamil Nadu By Election: சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19-ம் தேதி நடக்கிறது. இதற்கான அமமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். அதிமுக வேட்பாளர்கள் பட்டியலும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டார்கள்.

Tamil Nadu By Election

ஏற்கனவே நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. நடக்கவிருக்கும் 4 தொகுதிகளோடு சேர்த்து மொத்தம் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளும் மே 23-ம் தேதி வெளியாகிறது.

Live Blog

4 Constituencies By Election: TTV announces their candidates for 4 constituencies



























Highlights

    17:16 (IST)22 Apr 2019

    அதிமுக தேர்தல் பணிக்குழு

    மே 19-ம் தேதி நடக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் 4 தொகுதிகளுக்கான தேர்தல் பணிக்குழுவை நியமித்திருக்கிறது அதிமுக. 

    17:04 (IST)22 Apr 2019

    அதிமுக ஆலோசனைக் கூட்டம்

    4 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்னும் சிறிது நேரத்தில் அறிவிக்கப்படுவதைத் தொடர்ந்து தற்போது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  

    13:10 (IST)22 Apr 2019

    4 constituencies By Election: அதிமுக வேட்பாளர்கள்

    சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளின் இடைத்தேர்தலில் போட்டியிட, அதிமுக-வினர் 300 பேர் விருப்பமனு தாக்கல் செய்திருக்கிறார்கள். 

    12:17 (IST)22 Apr 2019

    4 constituencies: டிடிவி தினகரன் விண்ணப்பம்

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் விண்ணப்பம்

    11:36 (IST)22 Apr 2019

    By Election: வேட்புமனு துவக்கம்

    4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது. 

    11:09 (IST)22 Apr 2019

    தங்க தமிழ்ச்செல்வன் குற்றசாட்டு

    மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வைத்திருக்கும் இடம் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக அமமுக-வின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார். 

    10:19 (IST)22 Apr 2019

    4 constituencies By Election: அதிமுக நேர்க்காணல்

    அதிமுக சார்பில் 4 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேற்று நேர்க்காணல் நடந்தது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை இறுதி பட்டியல் வெளியாகிறது.

    10:07 (IST)22 Apr 2019

    அமமுக வேட்பாளர்கள்

    நடக்கவிருக்கும் 4 தொகுதிகளோடு சேர்த்து மொத்தம் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளும் மே 23-ம் தேதி வெளியாகிறது.
    Aiadmk Ammk
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment