கருத்துக் கணிப்பு முடிவுகள் தேர்தல் முடிவுகள் அல்ல… கடைசி 3 மக்களவைத் தேர்தல் முடிவுகள் தான் இதற்கு உதாரணம்!

2014 கருத்துக் கணிப்பு முடிவுகள் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்று அறிவித்தன. ஆனால் தேர்தல் முடிவுகளோ ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு சாதகமாக அமைந்தன.

By: Updated: May 21, 2019, 12:36:36 PM

Exit Poll Results Vs Actual General Election Results 2004, 2009, 2014 : 19/05/2019 அன்று 7ம் கட்ட மக்களவைத் தேர்தல் முடிவுற்ற நிலையில் சில நிறுவனங்கள் ஊடகங்களுடன் இணைந்து கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. இதில் பலரும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று அறிவித்துள்ளனர்.

ஆனால் எப்போதுமே கருத்துக் கணிப்பு முடிவுகளை ஒத்திருப்பதில்லை உண்மையான தேர்தல் முடிவுகள். 2004, 2009, மற்றும் 2014ம் ஆண்டு நடைபெற்ற கருத்துக் கணிப்புகள் மற்றும் அதற்கு பின்பு வெளியான தேர்தல் முடிவுகள் ஆகியவற்றை இந்த கட்டுரையில் படிக்கலாம்.

Exit Poll Results Vs Actual General Election Results 2004, 2009, 2014

2004 exit poll results vs 2004 general election results

2004ம் ஆண்டு, ஆஜ்தக் ORG-Marg, என்.டி.டி.வி., ஸ்டார் நியூஸ் சிவோட்டார், ஜீ நியூஸ் போன்ற செய்தி நிறுவனங்கள் கருத்துக் கணிப்புகளை மேற்கொண்டனர்.  இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்று அறிவித்தன. ஆனால் தேர்தல் முடிவுகளோ ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு சாதகமாக அமைந்தன. காங்கிரஸ் தலைமையில், மன்மோகன் சிங் பிரதமராக பதவியேற்றார்.

543 இடங்கள் கொண்ட இந்திய நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி 145 தொகுதிகள் வெற்றி பெற்றது. அதன் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்த்து 219 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. ஆனால் பாஜகவோ 138 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றியோடு சேர்த்து 187 இடங்களை மட்டுமே கைப்பற்றியது பாஜக.

Exit Poll resutls 2004

ஆஜ் தக் கருத்துக் கணிப்பு

பாஜக கூட்டணி – 248
காங்கிரஸ் கூட்டணி – 190
இதர – 105

என்.டி.டி.வி கருத்துக் கணிப்பு

பாஜக கூட்டணி – 230 – 250
காங்கிரஸ் கூட்டணி – 190 – 205
இதர – 100 – 120

ஜீ நியூஸ்

பாஜக கூட்டணி – 249
காங்கிரஸ் கூட்டணி – 176
இதர – 118

ஒட்டு மொத்த முடிவுகளில் 20 முதல் 40 தொகுதிகளுக்கான முடிவுகள் மாறி இருந்தன. ஆனால் மேற்கு வங்கம், உத்திரப்பிரதேசம், மற்றும் கேரளாவில் கருத்துக் கணிப்பு முடிவுகளுக்கு முற்றிலும் மாறாக தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன.

Exit Poll Results 2009 Vs General election results 2009

காங்கிரஸ் தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அனைத்து கருத்துக் கணிப்பு முடிவுகளும் அறிவித்தன. ஆனால் துல்லியத்தன்மை என்பது சுத்தமாக இல்லை என்பதற்கு 2009ம் ஆண்டு வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள் சாட்சி.  ஸ்டார் நிறுவனம், டைம்ஸ் நவ், ஹெட்லைன்ஸ் டுடே உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் கருத்துக் கணிப்பு முடிவுகளை அறிவித்தனர்.

2014 கருத்துக் கணிப்பு முடிவுகள் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்று அறிவித்தன. ஆனால் தேர்தல் முடிவுகளோ ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு சாதகமாக அமைந்தன.  மே 13ம் தேதி 2009ம் ஆண்டு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் இருந்து 60 முதல் 80 தொகுதிகளுக்கான முடிவுகள் முற்றிலுமாக வேறுபட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின. காங்கிரஸ் கூட்டணி 262 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மற்றவை 79 தொகுதிகளில் வென்றன.

சி.என்.என். ஐபின் கருத்துக் கணிப்பு

ஐக்கிய முற்போக்கு கூட்டணி – 185 – 205 வரை
தேசிய ஜனநாயக கூட்டணி – 165 – 185
மூன்றாம் அணி – 110 முதல் 130 வரை

ஸ்டார் நெல்சன்

காங்கிரஸ் கூட்டணி – 199
பாஜக கூட்டணி – 196
மூன்றாம் அணி – 100

இந்தியா டிவி – சிவோட்டர்

காங்கிரஸ் கூட்டணி – 189 முதல் 201 வரை
பாஜக கூட்டணி – 183 முதல் 195 வரை
மூன்றாம் அணி – 105 முதல் 121 வரை

2014 Exit Poll Results Vs General Election Results 2014

மோடி அலை அதிக அளவில் வீசப்பட்ட காலம். மிக துல்லியமாக சில இடங்களை கணித்துக் கூறியது ஊடகம். சில இடங்களில் சொதப்பல். காங்கிரஸ் அணி வெற்றி பெறும் இடங்களாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு சற்று குறைவாகவே தேர்தல் முடிவுகள் வெளியாகின. டைம்ஸ் நவ், சி.என்.என். ஐபிஎன், இந்தியா டிவி சிவோட்டர், நியூஸ் 24 சாணக்கியா ஆகிய ஊடகங்கள் கருத்துக் கணிப்பினை மேற்கொண்டனர்.

கூட்டணிக் கட்சிகளுடன் 336 இடங்களை கைப்பற்றியது பாஜக. பாஜக மட்டுமே அந்த தேர்தலில் 282 இடங்களில் வெற்றி பெற்றன. கட்சி துவங்கிய வரலாற்றில் இருந்து பார்த்தால் பெரும்பான்மையோடு பாஜக ஆட்சி அமைத்தது இதுவே முதல்முறை. முழுமையாக 5 ஆண்டுகள் நிறைவு செய்ததும் இதுவே முதல் முறை. காங்கிரஸ் கட்சி வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. கூட்டணிக்கட்சிகளோடு 60 இடங்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டது காங்கிரஸ்.

டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு

பாஜக கூட்டணி – 249
காங்கிரஸ் கூட்டணி – 148
இதர – 146

இந்தியா டிவி சி – வோட்டர்

பாஜக கூட்டணி – 289
காங்கிரஸ் கூட்டணி – 107
இதர – 147

நியூஸ் 24 சாணக்கியா

பாஜக கூட்டணி – 340
காங்கிரஸ் கூட்டணி – 70
இதர – 133

மேலும் படிக்க : தேர்தல் முடிவுகள் குறித்த உங்களின் அனைத்து கேள்விகளுக்குமான பதில்கள் இங்கே 

Get all the Latest Tamil News and Election 2020 News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

Web Title:Exit poll results vs actual election results 2004 2009

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X