20 மாநிலங்கள்… 91 தொகுதிகள்… முதற்கட்ட வாக்குப்பதிவு ஹைலைட்ஸ்

Phase 1 Lok Sabha Election Voting: 4 பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளில் மட்டும் இன்று முதல் கட்ட தேர்தல் நடந்தது.

Indian general election 2019 : பாராளுமன்ற முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 20 மாநிலங்களின் இன்று (11.4.19)வாக்குப்பதிவு நடக்கிறது. மேலும், ஆந்திரா உள்ளிட்ட 4 மாநில சட்டசபை தொகுதிகளிலும் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது.

மக்களவைத் தேர்தலில் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 91 தொகுதிகளில் முதல்கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. ஆந்திரா 25, அருணாச்சல பிரதேசம் 2, அசாம் 5, பிஹார் 4, சத் தீஸ்கர் 1, ஜம்மு காஷ்மீர் 2, மகாராஷ்டிரா 7, மணிப்பூர் 1, மேகாலயா 2, மிசோரம் 1, நாகாலாந்து 1, ஒடிசா 4, சிக்கிம் 1, தெலங்கானா 17, திரிபுரா 1, உத்தர பிரதேசம் 8, உத்தராகண்ட் 5, மேற்கு வங்கம் 2, அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1, லட்சத்தீவுகள் 1 என மொத்தம் 91 தொகுதிகள் முதல்கட்ட தேர்தலை எதிர்கொள்கின்றன.

மேலும் படிக்க.. நம் வாக்கு நமது உரிமை”-அழகான கிராஃபிட்டிகள் மூலம் ஆழமான விழிப்புணர்வு!

Lok Sabha Election Phase 1 Polling:

சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் 4 மாநிலங்களில் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகியவை இன்று ஒரே கட்ட தேர்தலை சந்திக்கின்றன. மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஒடிசாவில் உள்ள 147 தொகுதிகளில் 28 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு மட்டும் இன்று வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

Live Blog

நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று தொடங்கி அடுத்த மாதம் 19-ம் தேதி வரை 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

17:54 (IST)11 Apr 2019
மணக்கோலத்தில் வாக்களித்த நபர்
16:50 (IST)11 Apr 2019
உள்துறை விளக்கம்

ராகுல் காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காங்கிரஸிடம் இருந்து எந்தக் கடிதமும் வரவில்லை என உள்துறை அமைச்சரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

16:21 (IST)11 Apr 2019
தற்போதைய வாக்குப்பதிவு நிலவரம்

அஸ்ஸாம் - 63%

மேகாலயா - 55%

மகாராஷ்ட்ரா - 38.35%

லட்சத்தீவுகள் - 51.25

மணிப்பூர் - 68.90%

உத்திரகாண்ட் - 46.59%

உத்திர பிரதேசம் - 50.86%

16:01 (IST)11 Apr 2019
ராகுல் காந்தி உயிருக்கு ஆபத்து

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி சார்பில் உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

15:49 (IST)11 Apr 2019
பாலகிருஷ்ண ரெட்டிக்கு தடையில்லை

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலோ, தேர்தல் நடத்தை விதிகளிலோ ஒருவரை பிரசாரம் செய்ய தடை விதிக்க எந்த விதிகளும் இல்லை என்பதால், மனைவிக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பிரசாரம் செய்ய தடை இல்லை  என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

15:35 (IST)11 Apr 2019
கரூரில் வருமானவரி சோதனை

கரூரில் தனியார் கல்லூரி பங்குதாரரின் வீடு மற்றும் அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். 

15:24 (IST)11 Apr 2019
ஸ்மிரிதி இரானி வேட்பு மனு தாக்கல்

உத்தரபிரதேசம் மாநிலம், அமேதி மக்களவை தொகுதியில் போட்டியிட மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

15:19 (IST)11 Apr 2019
அதிமுக பிரமுகர் வீட்டில் ரெய்டு

திருச்சி அருகே உள்ள வையம்பட்டி, குமாரவாடியில் அ.தி.மு.க பிரமுகர் கல்பனா வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ. 50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

15:07 (IST)11 Apr 2019
உலகிலேயே குள்ளமான பெண் ஜனநாயக கடமையை ஆற்றினார்.

14:47 (IST)11 Apr 2019
வாக்குப்பதிவு நிலவரம்:

மதியம் 1 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள்: 

நாகலாந்து: 57%

மணிப்பூர்: 53.44%

உத்தராகண்ட்: 41.27%

தெலங்கானா: 38.8%

அருணாச்சலப் பிரதேசம்:  40.95%

பீகார்: 34.60%

ஒடிசா: 41%

14:21 (IST)11 Apr 2019
சோனியா காந்தி பேரணி சென்ற காட்சி!
14:20 (IST)11 Apr 2019
சோனியா காந்தி வேட்புமனு தாக்கல்:

ரேபரேலி மக்களவை தொகுதியில் போட்டியிடும் சோனியா காந்தி தொண்டர்களுடன் பேரணியாக சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி 5 ஆவது முறையாக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

14:17 (IST)11 Apr 2019
ஆந்திராவில் மோதல்:

ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் தெலுங்குதேசம்- ஒய்எஸ்ஆர் கட்சி தொண்டர்களிடையே  ஏற்பட்ட திடீர்  மோதலில் 2 பேர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதில் ஒருவர் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர் என்பது உறுதியாகியுள்ளது.

14:00 (IST)11 Apr 2019
சமந்தா வாக்குப்பதிவு:

ஹைதராபாத் அருகே உள்ள வாக்குச்சாவடி மையத்தில் கணவர் நாக சைதன்யாவுடன் சென்று நடிகை சமந்தா ஓட்டு போட்டார்.Hyderabad: Tollywood actors Naga Chaitanya and Samantha arrive at a polling station in Nanakramguda, Gachibowli to cast their vote for #IndiaElections2019 pic.twitter.com/oFLiit6CTj— ANI (@ANI) 11 April 2019

13:01 (IST)11 Apr 2019
ஆந்திரா- தெலுங்குதேசம் - ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் திடீர் மோதல்
12:31 (IST)11 Apr 2019
இந்திய தலைமைத்தேர்தல் ஆணையத்திற்கு சந்திரபாபு நாயுடு கடிதம் :

ஆந்திராவில் நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படவில்லை   என்று  செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஆன இடங்களில் மறு தேர்தல் நடத்த இந்திய தலைமைத்தேர்தல் ஆணையத்திற்கு சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். 

12:00 (IST)11 Apr 2019
வாக்குப்பதிவு நிலவரம்:

காலை 11 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள்: 

நாகலாந்து: 41%

மேகாலயா: 27%

அருணாச்சல பிரதேசம்: 27.48%

தெலங்கானா: 22.84%

மிசோரம்: 29.8%

மேற்கு வங்கம்: 38.08%

மணிப்பூர்: 35.03%

11:28 (IST)11 Apr 2019
வரிசையில் நின்று வாக்களித்த ஜூனியர் என்.டி.ஆர்:

தெலுங்கு சினிமாவின்  சூப்பர் ஸ்டார்களில் ஒருவரும்,  என்.டி. ஆரின் பேரனுமாகிய ஜூனியர் என்.டி.ஆர்   வரிசையில் நின்று வாக்களித்தார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாக  பரவி வருகிறது.ஜூனியர் என்டிஆர் வரிசையில் நின்று வாக்களித்த காட்சி...| #ElectionsWithPT | #SeeEverySide pic.twitter.com/hnlcgmkEFg— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) 11 April 2019

11:01 (IST)11 Apr 2019
குடும்பத்துடன் வாக்களித்தார் முதல்வர் சந்திரபாபு நாயுடு:

அமராவதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில்  குடும்பத்துடன் சென்று வாக்கு பதிவு செய்தார் ஆந்திரா முதல்வர் சந்திரப்பாபு நாயுடு. 

10:59 (IST)11 Apr 2019
நிதின் கட்கரி ஓட்டுப்பதிவு:

நாக்பூரில் தனது வாக்கை பதிவு செய்தார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. 

10:10 (IST)11 Apr 2019
ராகுல் காந்தி ட்விட்டர் பதிவு:

வேலைவாய்ப்பின்மை, பணமதிப்பிழப்பு, விவசாயிகளின் வலி, ஜிஎஸ்டி வரி, ரஃபேல் ஊழல் ஆகிய அனைத்தையும் மனதில் வைத்து நம் நாட்டின் எதிர்காலத்தை பற்றி சிந்தித்து வாக்களியுங்கள்  என்று ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

09:32 (IST)11 Apr 2019
ஜெகன் மோகன் ரெட்டி வாக்குப்பதிவு:

மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்,  அச்சமில்லாமல் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆந்திராவில் இன்று காலை அவர் தனது வாக்கினை பதிவு செய்தார். 

09:18 (IST)11 Apr 2019
வாக்குப்பதிவுக்கு பின்பு செல்பி!

சிக்கியமில் வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு பின் செல்ஃபி எடுத்துக் கொள்ள 6 வாக்குச் சாவடிகளில் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. 

09:05 (IST)11 Apr 2019
பிரதமர் வேண்டுக்கோள்:

அதிக எண்ணிக்கையில் வாக்களித்து சாதனைப் படைக்க பிரதமர் வேண்டுகோள் வாக்களார்களுக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.  

09:04 (IST)11 Apr 2019
வாக்களார்களுக்கு கெளரவம்:

மேற்கு காசி கில்ஸ் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் அதிகாலையிலேயே சென்று முதலில் வாக்களித்த 5 வாக்காளர்கள் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

08:43 (IST)11 Apr 2019
பிரச்சாரம் ஓய்வு:

91 பாராளுமன்ற தொகுதிகளிலும், 4 சட்டசபை தேர்தல்களிலும் அனல்பறக்கும் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை ஓய்ந்தது. பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா கட்சித்தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள் பிரசாரம் செய்தனர். வேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர்.

08:39 (IST)11 Apr 2019
144 தடை உத்தரவு:

வாக்கு பதிவு நடைபெற உள்ள இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குச்சாவடிகளைச் சுற்றி போலீஸார் வாகனங்களில் ரோந்து சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலைப் பொறுத்தமட்டில், 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகள் இன்று முதல் கட்ட தேர்தலை சந்திக்கின்றன.

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close