எல்.கே.சுதீஷ் சொத்து மதிப்பு 330 சதவிகிதம் உயர்வா? லேட்டஸ்ட் நிலவரம் இதோ…

2017-2018 நிதியாண்டில் அந்த வருமானம் 9.80 லட்சமாக குறைந்துள்ளது

By: Updated: March 24, 2019, 03:21:25 PM

Kallakurichi DMDK candidate LK sudhish’s movable assets value : 2014ம் ஆண்டு சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார் எல்.கே.சுதீஷ். தேமுதிகவின் துணைப் பொதுச் செயலாளரான இவர்  இம்முறை கள்ளக்குறிச்சியில் போட்டியிடுகிறார்.  வேட்புமனு தாக்கல் செய்யும் போது, அதில் அவருடைய சொத்து மதிப்பினை கணக்கிட்டுள்ளார். ரூ.3.93 கோடியாக 2014ம் ஆண்டு இருந்த சுதீஷின் குடும்ப சொத்து மதிப்பு தற்போது 17.18 கோடியாக உயர்ந்துள்ளது.

ரூ.6.81 கோடி மதிப்பாலான சொத்துகள் இவர் பெயரிலும், தன்னுடைய மனைவி பூரணஜோதி பெயரில் 9 கோடியும், அம்மா அம்சவேணி பெயரில் 29 லட்சமும், மகள் ஜானுஸ்ரீ பெயரில் 71 லட்சமும், மற்றொரு மகள் கீர்த்தனா பெயரில் 36 லட்சமும் இருப்பதாக கணக்கில் காட்டியுள்ளார்.

Kallakurichi DMDK candidate LK sudhish’s movable assets value

இக்குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பாக 60.71 கோடியை கணக்கில் காட்டியுள்ளார். 2014ம் ஆண்டை விட 77% இவருடைய மொத்த சொத்து மதிப்புகள் அதிகரித்துள்ளது. தேர்தல் ஆணையத்திடம் சொத்து மதிப்புகளை ஒப்படைத்ததோடு, முகநூல், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஃப்ரோபைல்களையும் தெரியப்படுத்தியுள்ளார்.

எல்.கே.எஸ் என்ற பெயரில் திருமண பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார். 2013-2014ல் இவருடைய வருமானம் 22.89 லட்சமாக இருந்தது. 2017-2018 நிதியாண்டில் அந்த வருமானம் 9.80 லட்சமாக குறைந்துள்ளது (அதாவது 57%).

2018ம் ஆண்டில் எல்.கே.சுதீஷின் மனைவி 53.49 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ கார் ஒன்றை வாங்கியுள்ளார். சுதீஷ் அதற்கு முந்திய வருடம் 20 லட்சம் மதிப்புள்ள இன்னோவா காரை வாங்கியுள்ளார். அவருடைய மகள் 25 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் கார் ஒன்றையும் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஆட்சியில் இல்லை, அதிகாரத்தில் இல்லை என்றாலும்கூட சில அரசியல்வாதிகளின் சொத்து மதிப்பு எப்படித்தான் இப்படி எகிறுகிறதோ?’ என்கிற விமர்சனங்கள் எழுகின்றன.

மேலும் படிக்க : தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்: திருநாவுக்கரசர், வசந்தகுமார், ஈ.வி.கே.எஸ். பெயர்கள் அறிவிப்பு

Get all the Latest Tamil News and Election 2021 News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

Web Title:Kallakurichi dmdk candidate lk sudhishs movable assets value

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X