2014 லோக்சபா தேர்தலில் பெற்ற 282 இடங்களை விட அதிகம் பெற்று, தனிப் பெரும் கட்சியாக பா.ஜ., மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. கூட்டணி அல்லாமல் பா.ஜ., மட்டும் 300 க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.,விற்கு முக்கியமான குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களை தக்க வைத்துக் கொண்டதுடன், பெரும் சவாலாக இருந்த மேற்குவங்கம், ஒடிசா, வடகிழக்கு மாநிலங்கள், கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் பா.ஜ., அதிக இடங்களில் வெற்றுள்ளது.
லோக்சபா தேர்தல் நடத்தப்பட்ட 542 தொகுதிகளில் பா.ஜ., கூட்டணி 350 க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பா.ஜ., மட்டும் 303 இடங்களை கைப்பற்றி உள்ளது. 2014 ல் தேசிய ஜனநாயக கூட்டணி 336 இடங்களிலும், பா.ஜ., மட்டும் 282 இடங்களிலும் வெற்றி பெற்றது. கடந்த 30 ஆண்டுகளில் தனியாக ஒரு கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும்.
Read more : மக்களவை தேர்தல் - செய்தி உடனுக்குடன் ஆங்கிலத்தில் படிக்க
லோக்சபா தேர்தல் நடந்த 542 தொகுதிகளில், பா.ஜ., கூட்டணி 350 க்கும் அதிகமான இடங்கள்
பா.ஜ., மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக இழந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
ஆந்திராவின் 25 லோக்சபா தொகுதிகளையும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அள்ளியுள்ளது.