Makkal Needhi Maiam, AMMK, Naam Thamizhar Katchi, NOTA votes : எப்போதும் இருமுனைப் போட்டி கொண்ட தேர்தல் களங்களை மட்டுமே கண்டு வந்தது தமிழக தேர்தல் களம். ஆனால் இம்முறை 5 முனைப் போட்டிகள் இருப்பதாகவே பரபரப்பான பிரச்சார களங்கள், தேர்தல் அறிக்கைகள், பரப்புரைகள் இருந்தன. ஆனால் தேர்தல் முடிவுகளோ?
7 கட்டங்களாக நடைபெற்ற 17வது நாடாளுமன்ற தேர்தல்கள முடிவுகளும், இரண்டு கட்டங்களாக 22 சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகளும் வெளியாகி வருகின்றன. மாற்று அரசியலை மக்கள் விரும்புகின்றார்கள், சரியான நிர்வாகத்திறன் கொண்ட ஒரு மாற்றுத் தலைவரை மக்கள் விரும்புகின்றார்கள் என்ற முந்தைய கால கருத்துகளை புறந்தள்ளும் வகையில் வெளியாகி வருகின்றன.
ஜெயலலிதா இல்லாமல் களம் கண்ட அதிமுக, கலைஞர் இல்லாமல் களம் கண்ட திமுக, ஈழம் மற்றும் தமிழர்களுக்கான முன்னுரிமைகளை முன்வைத்து களம் இறங்கிய நாம் தமிழர் கட்சி, ஊழலற்ற அரசியல் களம் என்று களமிறங்கிய மக்கள் நீதி மய்யம், அதிமுகவிற்கு மாற்றாக கருதப்பட்ட தினகரனின் அமமுக என்று 5 பக்க பிரச்சாரங்களில் தலைசுற்றிப் போய் தான் இருந்தது தேர்தல் முடிவுகளுக்கு முந்தைய நாட்கள்.
ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, முதல் இரண்டு இடங்களை எப்போதும் போல் தக்க வைத்துள்ளது அதிமுக மற்றும் திமுக. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கூட மக்கள் மத்தியில் பெரும்பான்மை பெற்ற நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்த பாஜகவிற்கு ஒரு தொகுதி கூட வெற்றியில்லை என்பது வெற்றிகரமான தோல்வியாக நிச்சயம் கருத முடியாது.
மூன்று சுற்று இடைத்தேர்தல்கல் முடிவடைந்த நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் பெற்றுள்ள வாக்குகள் எவ்வளவு என்ற எண்ணிக்கை வெளியாகியுள்ள்ளது. அதில் அதிமுக, திமுக கட்சிகளுக்கு அடுத்தபடியான இடம் பிடிக்கும் கட்சிகள் பெரும் வாக்குகள் என்பது மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்ற நிலையில் சில இடங்களில் ஆயிரம் முதல் மூவாயிரம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளனர்.
சில இடங்களில் நூறில் இருந்து 500 என்பதே மிகப் பெரிய இலக்காக இருக்கிறது. பல்வேறு இடங்களில் நேரடியாக நோட்டாவுடன் தான் போட்டியிடுகின்றனர் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, மற்றும் அமமுக என்றாலும் மிகையாகாது.
மேலும் படிக்க : Tamil Nadu By Election Results : 22 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள்… தொகுதி வாரியாக முன்னணி பெறும் வேட்பாளர்கள் யார்?2019