PM Narendra Modi Rally in Coimbatore: மக்களவை மற்றும் தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்திற்காக, அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட பொதுக் கூட்டம் கோவை கொடிசியா மைதானத்தில் இன்று (ஏப்.9) மாலை நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
Live Blog
PM Modi Rally in Coimbatore
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "நம் நாட்டு மீது தாக்குதல் நடத்தினால் வட்டியும் முதலுமாக திருப்பித் தரப்படும். துல்லிய தாக்குதல் நடந்ததா?விமானப்படை தாக்குதல் நடத்தியதா என எதிர்க்கட்சியினர் கேட்கின்றனர். எதிர்க்கட்சிகளின் எண்ணங்கள் நாட்டை காக்க உதவாது. 21ஆம் நூற்றாண்டில் இந்தியா எப்படி இருக்கும் என்பதை காட்டப்போகும் தேர்தல் இது. தேசியவாதிகளாக இருந்தோம், தேசியவாதிகளாக இருக்கிறோம், தேசியவாதிகளாகவே இருப்போம்" என்றார்.
வழக்கம் போல் தமிழில் பேச்சைத் துவக்கிய பிரதமர் மோடி,' மருதமலை முருகனுக்கு அரோகரா' என்று சொல்லி தனது உரையைத் துவக்கினார். தொடர்ந்து பேசிய மோடி, "நிலையான ஆட்சி அமைய நமது கூட்டணி விரும்புகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் அதிகாரத்தை கைப்பற்ற துடித்துக் கொண்டிருக்கின்றன. நாட்டின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். தேசிய பாதுகாப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகளிடம் எந்த திட்டமும் இல்லை. பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது" என்றார்.
பொதுக்கூட்டம் நடைபெறும் கொடிசியா மைதானம் மற்றும் விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள், கட்சியினர் வாகனங்கள் நிறுத்த தனி இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அவினாசி சாலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் நேரத்தில் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights