Advertisment

PM Modi Rally in Coimbatore: 'நாற்பதும் நமதே... நாடும் நமதே' - கோவையில் பிரதமர் மோடி சூளுரை

PM Modi to Address Rally in Coimbatore Today: கோவையில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
Narendra Modi Cabinet 2019, Modi Cabinet Ministers List

PM Narendra Modi Rally in Coimbatore: மக்களவை மற்றும் தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்திற்காக, அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட பொதுக் கூட்டம் கோவை கொடிசியா மைதானத்தில் இன்று (ஏப்.9) மாலை நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

Advertisment

 

Live Blog

PM Modi Rally in Coimbatore



























Highlights

    19:48 (IST)09 Apr 2019

    வட்டியும் முதலுமாக அடிப்போம்...

    தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "நம் நாட்டு மீது தாக்குதல் நடத்தினால் வட்டியும் முதலுமாக திருப்பித் தரப்படும். துல்லிய தாக்குதல் நடந்ததா?விமானப்படை தாக்குதல் நடத்தியதா என எதிர்க்கட்சியினர் கேட்கின்றனர். எதிர்க்கட்சிகளின் எண்ணங்கள் நாட்டை காக்க உதவாது. 21ஆம் நூற்றாண்டில் இந்தியா எப்படி இருக்கும் என்பதை காட்டப்போகும் தேர்தல் இது. தேசியவாதிகளாக இருந்தோம், தேசியவாதிகளாக இருக்கிறோம், தேசியவாதிகளாகவே இருப்போம்" என்றார். 

    19:29 (IST)09 Apr 2019

    மருதமலை முருகனுக்கு அரோகரா

    வழக்கம் போல் தமிழில் பேச்சைத் துவக்கிய பிரதமர் மோடி,' மருதமலை முருகனுக்கு அரோகரா' என்று சொல்லி தனது உரையைத் துவக்கினார். தொடர்ந்து பேசிய மோடி, "நிலையான ஆட்சி அமைய நமது கூட்டணி விரும்புகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் அதிகாரத்தை கைப்பற்ற துடித்துக் கொண்டிருக்கின்றன. நாட்டின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். தேசிய பாதுகாப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகளிடம் எந்த திட்டமும் இல்லை. பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது" என்றார். 

    19:08 (IST)09 Apr 2019

    கோவை வந்த பிரதமர் மோடி

    தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, கோவை வந்தடைந்தார். மாலை 6.45 மணிக்கு விமான நிலையம் வந்தடைந்த பிரதமரை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.

    18:09 (IST)09 Apr 2019

    வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு

    பொதுக்கூட்டம் நடைபெறும் கொடிசியா மைதானம் மற்றும் விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள், கட்சியினர் வாகனங்கள் நிறுத்த தனி இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அவினாசி சாலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் நேரத்தில் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

    17:49 (IST)09 Apr 2019

    5 வருடங்களுக்கு பிறகு அதே இடத்தில்...

    கடந்த 2014-ம் ஆண்டு கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்று பேசினார். அதே கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் இன்று 2-வது முறையாக பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தேர்தலை முன்னிட்டு, கூட்டணி இறுதியான பிறகு, முதன்முறையாக அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களும், தமிழகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் ஒரே மேடையில் தோன்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
    Narendra Modi Coimbatore
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment