Advertisment

அரசியலில் பிரியங்கா காந்தி... அரசியல் தலைவர்களின் கருத்தும் வாழ்த்துகளும்...

author-image
Nithya Pandian
புதுப்பிக்கப்பட்டது
New Update
Priyanka Gandhi Congress Party New Chief

Priyanka Gandhi Congress Party New Chief

Priyanka Gandhi Active Politics Entry Social Media Reaction : காங்கிரஸ் கட்சி இன்று மிக முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டதில் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் நிலவி வருகிறது.

Advertisment

பிரியங்கா காந்தி இதுவரையிலும் தன்னுடைய சகோதரனுக்காகவும், அம்மாவிற்காகவும் தான் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். ஆனால் பிரியங்கா காந்திக்கு தற்போது கட்சியில் பொதுச் செயலாளர் பொறுப்பினை அளித்து, உத்திரப் பிரதேசத்தில்  பொதுத் தேர்தல் பணிகளை ஒதுக்கிக் கொடுத்துள்ளது காங்கிரஸ் கட்சி.

மேலும் படிக்க : தொடங்கியது ப்ரியங்கா காந்தியின் அரசியல் பயணம்... 

Priyanka Gandhi Active Politics Entry Social Media Reactions

மோதிலால் வோரா

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மோதிலால் வோரா ”பிரியங்கா காந்திக்கு அளிக்கப்பட்ட பொறுப்பானது மிக முக்கியமானது. இதனால் கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் மட்டும் மாற்றம் ஏற்படாது. தேசத்தின் மற்ற பகுதிகளிலும் மாற்றங்கள் உருவாகும்” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

ராகுல் காந்தி

இளம் தலைவர்கள் உத்திரப் பிரதேச மாநிலத்தின் அரசியலை மாற்றம் செய்ய விரும்புகின்றோம் என செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் பிரியங்கா காந்தியின் நியமனம் குறித்து குறிப்பிட்டிருக்கிறார் ராகுல் காந்தி.

January 2019

ராபர்ட் வத்ரா

பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா ”உன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு படிநிலையிலும் நான் உன்னுடன் இருப்பேன். வாழ்த்துகள்” என்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலவர் மெஹபூபா முஃப்தி “குழப்பம் மற்றும் கடுமையாக இருக்கும் அரசியலுக்கு ப்ரியங்கா காந்தியை வரவேற்கின்றேன். நேரு - காந்தி வம்சாவளியின் கிரேஸ் மற்றும் தனிப்பட்ட ஆளுமையில் அரசியலுக்கு வரும் பிரியங்காவிற்கு வாழ்த்துகள்... 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துவாரா பிரியங்கா” என கேள்வியும் எழுப்பியுள்ளார்.

January 2019

சம்பித் பத்ரா - பாஜக செய்தித் தொடர்பாளர்

பாஜக கட்சியின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா “ப்ரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசம் என்பது, ராகுல் காந்தியின் தோல்வியைத் தான் காட்டுகிறது. இதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது. ஒரு குடும்ப அரசியல் இது” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

திருநாவுக்கரசர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தன்னுடைய வாழ்த்தினை அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார். அதில் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு மேலும் வலு சேர்த்திட பிரியங்காவிற்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார் அவர்.

January 2019

Priyanka Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment