Advertisment

வாக்காளர்கள் மீது செண்டிமென்ட் அட்டாக் : மகள்களை களமிறக்கும் தலைவர்கள்

Tamilnadu Assembly Election 2021 : தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், வேட்பாளர்கள், மக்களை கவர புதுவித பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
வாக்காளர்கள் மீது செண்டிமென்ட் அட்டாக் : மகள்களை களமிறக்கும் தலைவர்கள்

Tamilnadu Assembly Election 2021 Election Campaign Tamilnadu : தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், வேட்பாளர்கள் பலர் தங்களது மகள்களை பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளனர்.

Advertisment

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் அனைவரும் தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறன்றனர்.  இந்த தேர்தலுக்காக கடந்த 12-ந் தேதி தொடங்கிய வேட்புமனுதாக்கல் தொடங்கியது. கடந்த 8 நாட்களாக வேட்பாளர்கள் தங்களது தொகுதியில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வந்த இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 4-ந் தேதியுடன் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவடைய உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர தோல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தேர்தலில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் மட்டுமல்லாது வேட்பாளர்க்களின் குடும்பத்தினரும் பிரச்சாரம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த  தேர்தல்களில் வேட்பாளர்களின் குடும்பத்தினர் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள மக்களிடம் மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது வேட்பாளர்களின் குடும்பத்தினர் வேட்பாளர்களுடன் பிரச்சார வாகனத்தில் பயணம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மகள் :

மதுரை திருமங்கலம் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தனது தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திறந்தவெளி வேனில் பிரச்சாரம் மேற்கொள்ளும் அவருடன் அவரது மகள் பிரியதர்ஷினியும் தனது தந்தைக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த பிரச்சாரத்தில் பிரியதர்ஷினி கூறுகையில்,

24 மணி நேரமும் தொகுதி மக்கள் பற்றியே சிந்தித்துகொண்டிருக்கும் எனது தந்தை மதுரை திருமங்கலம் தொகுதியில், பல்வேறு அடிப்படை வசதிகயை செய்து கொடுத்துள்ளார்.  மேலும் கொரோனா காலத்தில் தன்னை பற்றி கவலைப்பாடாமல் மக்கள் பணியாற்றியவர் எனது தந்தை, அந்த காலகட்டத்தில், மக்களுக்கு அடிப்படி உணவுப்பொருட்களான காய்கறிகள், கோதுமை, அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாசிய பொருட்களை வீடு வீடாக வழங்கினார்.  ஆகவே உங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து எனது தந்தைக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார்.

  • அமைச்சர் விஜயபாஸ்கரின் மகள் :

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 3-வது முறையாக புதுச்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.  இதனைத் தொடர்ந்து அந்த தொகுதியில் அவருக்கு அதரவாக முதல்வா பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் தனது மகள் பிரியதர்ஷினியுடன் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.  இதில் விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட  முக்கண்ணாமலைப்பட்டி, இலுப்பூர் ஆகிய பகுதியில் முஸ்லீம்களை சந்தித்து அமைச்சர் விஜய பாஸ்கர் வாக்கு சேகரித்த நிலையில், அவரது மகள் பிரிதர்ஷினி அதே பகுதியில் வீடு விடாக சென்று அதிமுகவின் தேர்தல் அறிக்கைகைளை மக்களிடம் கொடுத்து தனது தந்தைக்காக வாக்கு சேகரித்துள்ளார். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதி மக்களுக்காக செய்த நலத்திட்டங்கள் குறித்து அவர் கூறியது  மக்களை வெகுவாக கவர்ந்த்து.

  • பேத்தியை களமிறங்கிய அ.தி.மு.க., வேட்பாளர் ராஜன் செல்லப்பா :

அமைச்சர்கள் தங்களது மகள்களை தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ள நிலையில், திருப்பரங்குன்றம், அ.தி.மு.க., வேட்பாளர் ராஜன் செல்லப்பா, தனது 10 வயது பேத்தியை பிரச்சாரத்தில் களமிறக்கியுள்ளார்.  கடந்த 17-ந் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்த அவர், தன் பேத்தி அதிதி மீனாட்சியை, மக்களிடம் அறிமுகப்படுத்தினார். இந்த பிரச்சார கூட்டத்தில் கைதேர்ந்த அரசியல்வாதி போல சிறுமி, அதிதி மீனாட்சி 'ஜெயலலிதா பாட்டியை எப்படி நம்பினீங்களோ, அதுமாதிரி எங்க தாத்தாவையும் நம்புங்க. உங்களுக்கு நல்லது செய்வாரு' என கூறியுள்ளார். சிறுமியின் இந்த பேச்சு மக்களை கவர்ந்தது.

  • திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி மகள்  

திமுகவின் முன்னாள் அமைச்சரும், துணை பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமி 6-வது முறையாக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதே தோகுதியில், இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் உள்ள பாமக சார்பில், திலகபாமா போட்டியிடுகிறார். தொடர்ந்து கடந்த 16-ந் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த ஐ.பெரியசாமி, தொகுதி மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். தந்தைக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அவரது மகள், இந்திரா ஆத்தூர் தொகுதியில் உள்ள கிராமங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த பிரச்சாரத்தில், திமுக தலைவர் ஸ்டாலினின், தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் வழங்கிய அவர், உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து எனது தந்தையை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இவர் செல்லும் இடங்களில் மக்கள் இவருக்கு ஆரத்தி எடுத்து பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். தந்தைக்கு அதரவாக இந்திரா பிரச்சாரத்தில் ஈடுபடுவது வழக்கமான ஒன்று.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Tamilnadu Election 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment