திமுக அணிக்கு மேலும் ஒரு கட்சி ஆதரவு: யாருக்கு எந்தத் தொகுதிகள் என பேச்சுவார்த்தை

பரபரப்பான அரசியல் சூழலில் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகிறது.

Tamilnadu election 2019  : தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியிருக்கும் நிலையில்   திமுக வேட்பாளர் பட்டியல் இன்னும் 2 நாட்களில் வெளியாகும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 அரசியல் கட்சிகளின் இன்றைய அப்டேட்கள் உடனுக்குடன்  இதோ.. 

8:00 PM: திமுக அணியில் சீட் ஒதுக்கப்படாவிட்டாலும்கூட, நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அணியை ஆதரிப்பது என விழுப்புரத்தில் நடைபெற்ற மமக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

7:30 PM: காங்கிரஸ் கட்சிக்கு கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, தேனி, சேலம் ஆகிய தொகுதிகள் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், ஏனைய தொகுதிகள் பேசப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மார்க்சிஸ்ட் கட்சிக்கு கோவை, மதுரை தொகுதிகளை திமுக ஒதுக்க இருப்பதாக தெரிகிறது. மார்க்சிஸ்ட் கட்சி தரப்பில் கன்னியாகுமரியை கேட்பதாக தகவல் இருக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டினத்துடன் தென்காசியை கேட்கிறது. ஆனால் தென்காசியை காங்கிரஸுக்கு ஒதுக்குவதால் இழுபறி இருப்பதாக தெரிகிறது.

7:15 PM : திமுக கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எந்தத் தொகுதிகள் என்பது தொடர்பான பேச்சுவார்த்தை அறிவாலயத்தில் நடந்தது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளுடன் அடுத்தடுத்து மாலையில் இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது.

பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ‘நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ந்து பேச இருக்கிறோம்’ என்றார்.

4:40 PM: மக்களவை தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவது என்பது குறித்து இறுதி செய்ய காங்கிரசுடன் இன்று 2-வது கட்டப் பேச்சுவார்த்தை அறிவாலயத்தில் நடந்தது. இதில் துரைமுருகன் தலைமையிலான காங்கிரஸ் குழுவினருடன், கே.எஸ்.அழகிரி தலைமையிலான காங்கிரஸ் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

3:20 PM: சேலத்தில் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், பிரேமலதா விஜயகாந்த் முன் வைத்த விமர்சனங்கள் குறித்து நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர், ‘எதிர்க்கட்சியாக இருக்கும்போது விமர்சனம் வைப்பது இயல்பு. கூட்டணியாக வந்த பிறகுதான் விமர்சிக்கிறார்களா? என்பதை பார்க்க வேண்டும். திமுக மீது வைகோ வைக்காத விமர்சனமா?’ என கேள்வி எழுப்பினார்.

மேலும், ‘நல்லது செய்தால் வரவேற்போம் என்றுதான் அவர் (பிரேமலதா) கூறியிருக்கிறார்’ என்றும் சொன்னார் முதல்வர்.

2. 30 PM : டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார் பாடகர் மனோ.

2.00 PM : கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சிகள் பல்வேறு சதிகளை செய்து வருகின்றனர். இன்னும் சில தினங்களில் சில கட்சிகள் அதிமுக- வில் இணைய இருக்கிறது. தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி எதுவுமில்லை .

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதாலேயே என்னை தலைமைச்செயலகத்தில் கே.சி.பழனிசாமி சந்தித்தார் கே.சி.பழனிசாமியை மீண்டும் அதிமுகவில் சேர்த்ததாக நாங்கள் கூறினோமா? சில கோரிக்கைகள் தொடர்பாகத்தான் தலைமைச்செயலகத்தில் என்ன அவர் சந்தித்தார்  ” என்று  முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

1. 00 PM : மக்களவை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

12. 40 PM :  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதாலேயே தலைமைச்செயலகத்தில் முதல்வரை கே.சி.பழனிசாமி சந்தித்தார். தேமுதிக விவகாரத்தில் மறப்போம், மன்னிப்போம் என்பதே நிலைப்பாடு என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

12. 30 PM : அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார் என்றும்,  அதிமுக என்ற குதிரையில் யாரும் சவாரி செய்யலாம்  அதற்காக குதிரையை தூக்கிச்செல்வேன் என கூறக்கூடாது  என்று  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

12. 00 PM :” 37 அதிமுக எம்.பி.க்களால் எந்த பயனும் கிடைக்கவில்லை என்ற பிரேமலதாவின் பேச்சை ஏற்க முடியாது.  பத்திரிகையாளர் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் ஒருமையில் பேசியதை எந்த வகையிலும் ஏற்க முடியாது” என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

11. 00 AM : மக்களவை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து, கே.எஸ் அழகிரி உள்ளிட்ட தொகுதி பங்கீடு குழுவினருடன் அண்ணா அறிவாலயத்தில் திமுக  தலைவர் ஸ்டாலின் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

10. 00 AM :அரசு தலைமைச் செயலகத்தை அரசியல் கட்சி நிலையமாக மாற்றியதற்காக முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று ஆர்.எஸ்.பாரதி  ஆளுநர் பன்வாரிலாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

9. 30 AM : 21 தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு நேர்காணல்  திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது .

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுகவுக்கு ஆதரவு அளிக்கும் அமைப்புகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த பல்வேறு கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், “ வருகின்ற மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. மேலும் பல கட்சிகள் எங்களுக்கு ஆதரவு தொிவித்துள்ளன.

மக்களவைத் தோ்தலுடன் சோ்த்து 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் நடத்தும் பட்சத்தில் அதிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு ஓரிரு தினங்களில் முறையாக அறிவிக்கப்படும்.

மேலும் படிக்க.. 11, 12-ல் அதிமுக நேர்காணல்: வேட்பாளர் தேர்வில் கட்சிகள் மும்முரம்

அதே போன்று 9, 10ம் தேதிகளில் திமுக சாா்பில் போட்டியிட விருப்பம் தொிவித்தவா்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு 2 நாட்களில் திமுக வேட்பாளா் பட்டியலும் அறிவிக்கப்படும். தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து துரைமுருகன் ஏற்கனவே கருத்து தொிவித்துவிட்டதால் அது குறித்து பேச நான் விரும்பவில்லை.

21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் லோக்சபா தேர்தலுடன் இணைந்து நடத்த வேண்டும். இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்கின்றன. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது.

மீண்டும் தேமுதிகவினர் யாரும் வந்து துரைமுருகனிடம் பேசிவிடக்கூடாது என்பதற்காக ஆளுங்கட்சியினர், துரைமுருகன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போட்டிருக்கலாம். ” என்று அவா் தொிவித்தார்.

Get all the Latest Tamil News and Election 2019 News at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close