தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு, காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள், திரைக் கலைஞர்கள் என பலரும் வாக்களித்து வருகின்றனர்.
Advertisment
வாக்குப்பதிவு தொடங்கும் முன்னரே, திருவான்மியூர் கார்ப்பரேஷன் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு, மனைவி ஷாலினியுடன் நடிகர் அஜித் வருகைப் புரிந்தார். அஜித் வாக்களிக்கக் கூடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அஜித்தின் தோற்றம் நெட்டிசன்களின் சில அரசியல் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
வாக்குப்பதிவிற்காக வந்திருந்த நடிகர் அஜித் அணிந்திருந்த மாஸ்க், அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நடிகர் அஜித் கருப்பு சிவப்பு நிறத்தில் மாஸ்க் அணிந்திருந்தார். சிவப்பு, கருப்பு எனும் போதே அரசியல் பார்வையில் திமுக வை குறிப்பால் உணர்த்துவதாக இருந்தது. ‘தல என்ன சொல்ல வர்றாரு’னு ரசிகர்களும் பொதுமக்களும் கன்ஃப்யூசனிலேயே இருக்கின்றனர்.
சென்னையை அடுத்த நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிப்பதற்காக 500 மீட்டர் தொலைவில் உள்ள தனது வீட்டில் இருந்து, நடிகர் விஜய் சைக்கிளில் வந்தார். நடிகர் விஜய் வந்திருந்த சைக்கிள் சிகப்பு, கருப்பு என்ற நிறத்தில் இருந்ததால், அவரின் சைக்கிள் பயணமும் அரசியல் விமர்சனங்களுக்கு உள்ளானது.
நடிகர் விஜய், திமு கழகத்திற்கு வாக்களிக்க குறிப்பால் உணர்த்துகிறாரா என்ற சந்தேகத்துடனான பேச்சும் சமூக வலைதளங்களில் வைரலாகியது. மேலும், பெட்ரோல் விலை உயர்வை சுட்டிக் காட்டவே விஜய் சைக்கிளில் வந்திருக்கிறார் எனவும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. இதுக்காக, விஜய் ரசிகர் மன்றத்தினர் அளித்த விளக்கம் தனிக்கதை.
தமிழகத்தின் இருபெரும் திரை நட்சத்திரங்களாக விளங்கக் கூடிய நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் இந்த செயல் இயல்பானதாகவோ, அரசியல் உள்நோக்கத்துடனோ, எதிர்பாராத விதமாகவோ நிகழ்ந்திருக்கலாம். ரசிகர்களும், பொதுமக்களும் சமூக வலைதளங்களில் இவற்றை ட்ரெண்ட் செய்தது, தேர்தல் ட்ரெண்டிங்கை விட முன்னிலை வகிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“