16th Chennai International Film Festival Kicks-Off - The Indo-Cine Appreciation Foundation (ICAF). தமிழக அரசு, தென்னிந்திய திரைப்பட சங்கம் மற்றும் இந்திய திரைப்பட கூட்டமைப்பு சேர்ந்து எட்டு நாட்கள் நடக்கக்கூடிய சர்வதேச திரைப்பட விழாவை சென்னையில் நேற்று துவங்கி வைத்தது. இந்த விழாவில் இடம்பெற இருக்கும் 150+ திரைப்படங்கள் சென்னையில் ஆறு இடங்களில் திரையிட இருக்கிறது. இந்த வருடம் முதல் முறையாக, ஜாம்பியா, கென்யா மற்றும் லத்தீன் அமெரிக்கா நாடுகளில் இருந்தும் திரைப்படங்கள் தேர்வாகி உள்ளது.
16வது சென்னை சர்வதேச திரைப்பட விழா புகழ் பெற்ற ஜப்பான் மொழி திரைப்படமான 'ஷாப் லிஃப்டர்ஸ்' திரைப்படத்துடன் 'கலைவாணர் அரங்கத்தில்' துவங்கியது. இந்த திரைப்படம் 76வது கோல்டன் குளோப் விருதுக்கு 'சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம்' என்ற வகையின் கீழ் தேர்வாகி உள்ளது. இந்த விழாவிற்கு பல்வேறு நாட்டை சேர்ந்த தூதரக நிர்வாகிகள் வந்து இருந்தனர் .
சர்வதேச திரைப்படங்கள் தவிர்த்து, வட சென்னை, ராட்சசன், 96, பரியேறும் பெருமாள், ஜீனியஸ் போன்ற 12 தமிழ் திரைப்படங்கள் போட்டியில் பங்கேற்கின்றன.
நிகழ்ச்சியில் பேசிய CIFF & ICAF பொது செயலாளர் தங்கராஜ், கூறுகையில் "இந்த ஆண்டு நான்கு படங்கள் பிரேசில் நாட்டிலிருந்து முதன் முறையாக தேர்வாகியுள்ளது. அதை தவிர்த்து, சமகால (CONTEMPORARY FILMS ) படங்கள் Indian - Panaroma பிரிவில் தேர்வாகியுள்ளது. தமிழக அரசு எங்களுக்கு இந்த விழாவிற்காக 75 லட்சம் வழங்கியுள்ளது, அதற்காக நாங்கள் அவர்களுக்கு நன்றி கூறுகிறோம். கோவா திரைப்பட விழாவுடன் எங்களை ஒப்பீடு செய்து பாருங்கள்; அவர்களுக்கு விழா நடத்துவதற்கு 25 கோடி ருபாய் அளிக்கப்படுகிறது. இந்த சிறிய பட்ஜெட்டில் நாங்கள் சிறப்பான படங்களை இங்கே திரையிட முற்படுகிறோம்."
ஜப்பான் நாட்டில் தென்னிந்திய மொழி படங்கள் பெரிய வரவேற்பை பெறுகின்றன. விழாவிற்கு வந்த ஜப்பான் நாடு தூதரக நிர்வாகி Kojiro Uchiyama, கூறுகையில் "சென்னை சர்வதேச திரைப்பட விழா நல்ல முறையில் நடத்தப்படுகிறது. உலகத்தில் உள்ள அணைத்து மொழி படங்களையும் இங்கே காணலாம். நாம் அனைவரும் சினிமா மூலம் ஒன்றாகிறோம். ஜப்பான் நாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'முத்து' திரைப்படம் இன்றும் மிக பிரபலம். அது ஜப்பானில் வெளியாகி 20 வருடங்கள் ஆகிறது. தற்பொழுது வெளியான பாஹுபலி-2 கூட சிறப்பான வரவேற்பை பெற்றது."
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்த விக்ரம்-வேதா இயக்குனர் காயத்ரி விழாவை புகழ்ந்து தள்ளினார். "சென்னை சர்வதேச திரைப்பட விழா சிறப்பாக அமைய பாடுபட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த அரங்கம் முழுவதும் நிறைந்து இருக்கும் சினிமா ரசிகர்களை பார்க்கும் பொழுது எனக்கு அவளோ பெருமையை இருக்கு! இது சென்னையில் மட்டுமே முடியும்," என்று கூறினார்.
இந்த சர்வதேச திரைப்பட விழா தொடர்ந்து எட்டு நாட்கள் (Dec 13 - Dec 20 ) நடைபெறுகிறது. மொத்தம் 59-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, 150 + படங்கள் களம் இறங்கியிருக்கும் திரைப்படங்கள், சென்னையில் ஆறு இடங்களில் (தேவி, தேவி பாலா, ரஷ்ய கலாச்சார மையம், SDC அண்ணா திரையரங்கம், Casino திரையரங்கம் மற்றும் தாகூர் திரைப்பட மையம்) திரையிடப்பட இருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு http://chennaifilmfest.com/ என்ற இணையதளத்தை கிளிக் செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.