இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில், இயக்குனர் ராம்குமார் பெரியசாமி இயக்கக்கத்தில் உருவாகியிருக்கிறது ரங்கூன். இந்த படத்தில் கௌதம் கார்த்திக், சனா மக்பூல் நடிக்கின்றனர்.
ஏர் ஆர் முருகதாஸின் தயாரிப்பு நிறுவனமான ஏஆர்எம் பிரொடக்ஷன், பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் கைகோர்த்து இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசையமைக்க, எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், ரங்கூன் திரைப்படம் ஜுன் 23-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிம்புவின் AAA, மற்றும் ஜெயம் ரவியின் வனமகன் ஆகிய திரைப்படங்களும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.