Advertisment

“2.0 படம்தான் முதலில் ரிலீஸாகும்” - ரஜினி பேட்டி

‘2.0 படம்தான் முதலில் ரிலீஸாகும்’ என சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார் ரஜினி.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajinikanth Comments BJP, Demonitisation, Rajiv Convicts Early Release: ரஜினிகாந்த் பேட்டி, பாரதிய ஜனதாக் கட்சி, பண மதிப்பிழப்பு, ராஜீவ் கொலைக் கைதிகள் விடுதலை

Rajinikanth Comments BJP, Demonitisation, Rajiv Convicts Early Release: ரஜினிகாந்த் பேட்டி, பாரதிய ஜனதாக் கட்சி, பண மதிப்பிழப்பு, ராஜீவ் கொலைக் கைதிகள் விடுதலை

‘2.0 படம்தான் முதலில் ரிலீஸாகும்’ என சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார் ரஜினி.

Advertisment

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக நடித்துவரும் படம் ‘காலா’. வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பில் தனுஷ் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார். ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி, நானா படேகர், அஞ்சலி பட்டில் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் ‘காலா’ படத்துக்கு முரளி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகப் பணியாற்றுகிறார். இதன் படப்பிடிப்பு மும்பை மற்றும் சென்னை ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் நடைபெற்று வருகிறது. முக்கால்வாசி காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக தகவல் வெளியானது. ஜனவரி மாதம் 25ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படம், ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என கூறப்பட்டது. கிராபிக்ஸ் வேலைகள் முடியாததே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

எனவே, பா.இரஞ்சித் இயக்கும் ‘காலா’ படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என வதந்திகள் உலாவரத் தொடங்கின. இதனை, தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நேற்று மறுத்துள்ளது. அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், அந்தச் செய்து பொய்யானது என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், துபாயில் நடைபெற்ற ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, நேற்று இரவு சென்னை திரும்பினார் ரஜினி. சென்னை விமான நிலையத்தில், ‘முதலில் ‘2.0’ படம் வெளியாகுமா அல்லது ‘காலா’ வெளியாகுமா?’ என்று ரஜினியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த ரஜினி, “2.0 படம்தான் முதலில் ரிலீஸாகும்” என்றார். இதைத்தவிர வேறெந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.

Tamil Cinema Kaala Movie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment