கேரளாவில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில், ஹீரோயினை மையப்படுத்திய படங்கள் திரையிடப்படுகின்றன.
22வது கேரள சர்வதேச திரைப்பட விழா, டிசம்பர் 8ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்த விழா நடைபெற இருக்கிறது. இதில், ஹீரோயினை மையப்படுத்தி, பெண்ணுக்கு முன்னுரிமை கொடுத்து எடுக்கப்பட்ட மலையாளப் படங்கள் ‘அவள்க்கொப்பம்’ என்ற பிரிவில் திரையிடப்படுகின்றன.
1970 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் வெளியான 7 படங்கள் இந்தப் பிரிவில் திரையிடப்படுகின்றன. பாஸ்கரன் இயக்கத்தில் 1969ஆம் ஆண்டு வெளியான ‘கள்ளிசெல்லம்மா’, பி.என்.மேனன் இயக்கத்தில் 1971ஆம் ஆண்டு வெளியான ‘குட்யேடாதி’, ஐ.வி.சசி இயக்கத்தில் 1978ஆம் ஆண்டு வெளியான ‘அவளோட ராவுகள்’, ஜார்ஜ் இயக்கத்தில் 1983ஆம் ஆண்டு வெளியான ‘அடமிண்டே வாரியெல்லு’, பத்மராஜன் இயக்கத்தில் 1986ஆம் ஆண்டு வெளியான ‘தேசனாடக்கிளி கரயாரில்லா’, டி.வி.சந்திரன் இயக்கத்தில் 1989ஆம் ஆண்டு வெளியான ‘அலிசிண்டே அன்வேஷாணம்’, ஹரிஹரன் இயக்கத்தில் 1994ஆம் ஆண்டு வெளியான ‘பரினயம்’ ஆகிய படங்கள்தான் அவை.
இந்த ஏழு படங்களும், மலையாள சினிமாவை பெருமைப்பட வைத்தவை. இந்தப் படங்களை, கேரள சர்வதேச திரைப்பட விழாவில் கண்டுகளிக்கலாம்.