Advertisment

இதுவரை பார்த்திராத ஷாருக்கான்... ஆக்ஷனில் விஜய் சேதுபதி : ஜவான் டிரெய்லரில் இதை கவனித்தீர்களா?

ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் பஞ்ச் டயலாக்குகளால் நிரம்பிய ஜவான் படத்தின் டிரெய்லர், ஷாருக்கானின் தீவிர ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமைந்துள்ளது

author-image
WebDesk
New Update
Shah rukh khan Jawan

ஷாருக்கான் நாயகனாக நடித்துள்ள ஜவான் திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது

பாலிவுட் சினிமாவின் பாட்சா என்று அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜவான் திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், ஷாருக்கான் படத்தில் எதிர்பார்க்கும் அத்தனை அம்சங்களும் இந்த டிரெய்லரில் இடம்பெற்றுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Advertisment

அட்ரினலின்-பம்பிங் ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் பஞ்ச் டயலாக்குகள் இடம்பெற்றுள்ள ஜவான் படத்தில் டிரெய்லர் ஷாருக்கானின் தீவிர ரசிகர்களுக்கு ஒரு பெரிய ட்ரீட்டாக அமைந்துள்ளது என்று சொல்லலாம். 172 வினாடிகள் கொண்ட இந்த டிரெய்லர் வீடியோவில், குறிப்பிட்ட தருணங்கள் மற்றும் நடிகர்கள் பற்றிய புதிரான தகவல்களும் இடம்பெற்றுள்ளன. இதனால் ஜவான் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு பலமடங்காக உயர்ந்துள்ளது.

பாலிவுட் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும் அட்லியின் ஜவான் படத்தின் முக்கிய அம்சங்கள்.

ஜவான் ஆக்ஷன் காட்சிகள்

மக்கள் அதிகம் உள்ள பகுதியில் அதிரடி காட்சிகள், கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் தகர்க்கப்படும் காட்சிகள், என பல காட்சிகளை கூறலாம். ஜவான் படத்தின் டிரெய்லர் அதிரடித் திரைப்பட ரசிகர்களை கவர்ந்திழுக்கும் அனைத்து அனைத்து அம்சங்களையும் அடங்கியுள்ளதாக உள்ளது. இதனால் செப்டம்பர் 7-ந் தேதி வெளியாக உள்ள ஜவான் படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பிரமிக்க வைக்கும் காட்சிகள் மற்றும் கவனமான எடிட்டிங் மூலம், த்ரில் மற்றும் ஆக்‌ஷன்-பேக் ரோலர்கோஸ்டராக டிரெய்லரிடம் அதகளம் பறக்கிறது.  தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகளில் ஈடுபட்டுள்ள முக்கிய நடிகர்களைக் காண்பிப்பதன் மூலம், அட்லீ மற்றும் குழுவினர் படம் ஒரு சிறந்த படைப்பாற்றல் மற்றும் சினிமா அனுபவம் கொண்ட குழுவாக இருக்கும் என்று ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

publive-image

ஜவான் படத்தில் விஜய் சேதுபதி

ஜவான் படத்தில் நடிகர்கள் மற்றும் குழுவினர் தென்னிந்தியாவின் முக்கிய நட்சத்திரங்கள்

ஜவான் படத்தில் ஷாருக்கான் நாயகனாக நடித்து வரும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி, முக்கிய கேரக்டரில் பிரியாமணி மற்றும் யோகி பாபு ஆகிய நடிகர்களும், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் என பல தென்னிந்திய நட்சத்திரங்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளனர். படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். அவர் ஒரு உயர் அதிகாரி கேரக்டரில் நடித்துள்ளதாக டிரெய்லர் மூலம் தெரியவருகிறது.

மேலும், சேதுபதி அதிரடி காட்சிகளில் தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தி, பார்வையாளர்களை கவர்ந்துள்ளார். அதேபோல் ப்ரியாமணி குண்டு துளைக்காத கியர் அணிந்து, ஒரு இயந்திர துப்பாக்கியை வைத்திருப்பதை போல் கட்டப்பட்டுள்ளது. இது அவரது கதாபாத்திரமும் பரபரப்பான ஆக்‌ஷன் காட்சிகளில் உள்ளது என்பதைக் குறிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத்தின் நிபுணத்துவத்தை டிரெய்லரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆற்றல்மிக்க பின்னணி இசை காட்சிகளுடன் ஒன்றிப்போயுள்ளது. தெறி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற பிளாக்பஸ்டர் படங்களுக்கு பெயர் பெற்ற அட்லியின் பாலிவுட் அறிமுகத்தை ஜவான் பெரிதாக்கியுள்ளது என்று சொல்லும் அளவுக்கு டிரெய்லர் த்ரில்லிங்காக உள்ளது.

publive-image

பாடலுக்கு நடனமாடும் மொட்டை ஷாருக்

கேமியோ ரோலில் தீபிகா படுகோனே

ஷாருக்கான் தீபிகா படுகோன் காம்போ எப்போதுமே ரசிகர்களின் உற்சாகத்தைத் தூண்டுவதை நிறுத்துவதில்லை. ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் (2007) படத்தில் தீபிகா அறிமுகமானதில் இருந்து இந்த கூட்டணி இணைந்தாலே ரசிகர்களின் உற்சாத்திற்கு எல்லை இல்லை என்று சொல்லலாம். அந்த படத்தை தொடர்ந்து சென்னை எக்ஸ்பிரஸ் (2013), ஹேப்பி நியூ இயர் (2014) மற்றும் பதான் (2023) ஆகிய மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். தற்போது 4-வது படமாக ஜவானில் தீபிகா இணைந்துள்ளார். இந்த டிரெய்லரில் தீபிகா ஆக்‌ஷன் காட்சிகளில் உள்ளார். அவரது கேரக்டர் வெறும் கண்துடைப்பு என்பதைத் தாண்டி, பெரிய பட்ஜெட் படங்களில் சிறப்புத் தோற்றங்களில் பெண் நடிகர்களுக்கு பெரும்பாலும் முக்கியத்துவம் இருக்கும் என்பதை இந்த வீடியோ மூலம் தெரிந்துகொள்ளும் அளவுக்கு தீபிகா சிவப்பு நிற புடவை அணிந்து, மழைக்கு நடுவே ஒரு ஆக்ஷன் காட்சியை திறமையாக எதிர்த்துப் போராடுகிறார்.

ஷாருக்கான்  ஹீரோவா அல்லது வில்லனா?

"நான் வில்லனாக மாறும் போது, எந்த ஹீரோவும் என்னை எதிர்த்து நிற்க முடியாது" என்று டிரெய்லரின் முடிவில் ஷாருக்கின் கேரக்டர் கூறுகிறது. “நான் யார், நான் என்ன? எனக்கு தெரியாது. ஒரு தாய்க்கு கொடுத்த வாக்குறுதியா அல்லது முடிக்கப்படாத நோக்கமா? நான் நல்லவனா கெட்டவனா? புண்ணியமா அல்லது பாவம்? உங்களையே கேட்டுகொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் தான் நான், நல்லது அல்லது கெட்டது, ”என்று டிரெய்லரின் தொடக்கத்திலேயே ஷாருக் கேரக்டர் வசனம் பேசுகிறது. இப்படத்தில் ஷாருக்கான் முக்கிய வேடத்தில் நடித்திருந்தாலும், அவர் சித்தரிக்கும் கதாபாத்திரம் குறித்த எந்த தகவலையும் வெளியிடாமல் தயாரிப்பாளர்கள் இதுவரை எச்சரிக்கையாக இருந்து வருகின்றனர். டான் மற்றும் டான் 2 போன்ற படங்களில் அவர் நடித்ததைப் போன்ற ஒரு ஆன்டிஹீரோவை அவர் வெளிப்படுத்துகிறாரா என்பது இன்னும் வெளிவரவில்லை, ஆனால் இந்த படத்தில் பார்வையாளர்களுக்கு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன என்பது உறுதி.

publive-image

இதுவரை பார்த்திராத கிங் கான்

ஜவான் டிரெய்லரின் அனைத்து அம்சங்களையும் சிறப்பாக காட்டினாலும், பல பிரமிக்க வைக்கும் கெட்அப்களில் தோன்றும் ஷாருக்கானின் கமாண்டிங் உண்மையிலேயே கவனத்தை ஈர்க்கிறது. அவரது உடலமைப்பின் வெவ்வேறு பகுதிகளின் காட்சிகள், உற்சாகமூட்டும் அதிரடி காட்சிகள்  பின்னணியில் தாக்கத்தை ஏற்படுத்தும் டைலாக்குகள், அவரது சக்திவாய்ந்த குரலுடன் தொடங்குகிறது. டீஸர் வெளிவரும்போது, அவரைப் பற்றிய பல காட்சிகள் பார்வைக்கு வருகின்றன. முதல் முழுமையான ஷாட், எரியும் அறையின் மையத்தில் ஷாருக் அமர்ந்திருப்பதையும், இயந்திரத் துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டிருப்பதையும், அரை முகமூடியை அணிவதையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது

மேலும், ஒரு காட்சியில் அவரது முழு உடலும் துணி கட்டுகளால் மூடப்பட்டிருக்கும், அதைத் தொடர்ந்து சிவப்பு சட்டை மற்றும் நீல நிற டெனிம் ஜீன்ஸ் அணிந்து நடனமாட தயாராகிறார். அதன்பிறகு மெட்ரோ ரயிலில் பயணிகளை பணயக்கைதிகளாக வைத்திருக்கும் ஷாருக்  மொட்டைத் தோற்றத்தில் காட்சியளிப்பதன் மூலம் டிரெய்லர் முடிவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Atlee Shah Rukh Khan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment