Advertisment

நவம்பர் 30ஆம் தேதி ரிலீஸுக்காக வரிசைகட்டும் படங்கள்

வருகிற 30ஆம் தேதி மட்டும் ‘கொடி வீரன்’, ‘திருட்டுப்பயலே 2’, ‘அருவி’, ‘ரிச்சி’, ‘அண்ணாதுரை’ என 5 படங்கள் ரிலீஸாக இருக்கின்றன.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
அமலா பால் நடிப்பில் ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் டிரெய்லர்

நவம்பர் 30 ஆம் தேதி ரிலீஸுக்காக 5 படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

Advertisment

ஜிஎஸ்டி, உள்ளாட்சி கேளிக்கை வரியால் ஏற்பட்ட பிரச்னைகளால், திட்டமிட்டபடி சில படங்கள் ரிலீஸாக முடியவில்லை. தீபாவளிக்கு விஜய் நடித்த ‘மெர்சல்’ வெளியானதால், அதன் பிறகு இரண்டு வாரங்களாக பெரிய படங்கள் எதுவுமே ரிலீஸாகவில்லை. சித்தார்த், ஆன்ட்ரியா நடித்த ‘அவள்’ மட்டுமே நேற்று வெளியானது.

ரிலீஸுக்குத் தயாராகி பல பெரிய படங்கள் காத்திருப்பதால், இந்த வருட இறுதிக்குள் அந்தப் படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர். அதன்படி, வருகிற 30ஆம் தேதி மட்டும் ‘கொடி வீரன்’, ‘திருட்டுப்பயலே 2’, ‘அருவி’, ‘ரிச்சி’, ‘அண்ணாதுரை’ என 5 படங்கள் ரிலீஸாக இருக்கின்றன.

சசிகுமார் நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கொடி வீரன்’. தீபாவளிக்கு ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படம், போதுமான தியேட்டர்கள் கிடைக்காததால் தீபாவளி ரிலீஸில் இருந்து பின்வாங்கியது. அதன்பிறகும் ஏகப்பட்ட படங்களின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டதால், வருகிற 30ஆம் தேதி ரிலீஸாகிறது.

‘கொடி வீரன்’ படத்தில் மகிமா நம்பியார், சனுஷா, பூர்ணா என 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் விதார்த் மற்றும் பால சரவணன் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். என்.ஆர்.ரகுநந்தன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை சசிகுமாரே தயாரித்துள்ளார்.

சுசி கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘திருட்டுப்பயலே 2’. பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். 2006ஆம் ஆண்டு வெளியான ‘திருட்டுப்பயலே’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது. ‘திருட்டுப்பயலே’ படத்தின் மூலம் சினிமா தயாரிப்பில் காலடி எடுத்துவைத்த ஏஜிஎஸ் நிறுவனம், இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அருவி’. பிந்து மாலினி, வேதாந்த் பரத்வாஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் தயாரித்துள்ளனர். படம் வெளியீட்டுக்கு முன்பே பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது இந்தப் படம்.

கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில், நிவின் பாலி நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘ரிச்சி’. நட்டி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், லட்சுமி பிரியா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் தூத்துக்குடி தாதாவாக நடித்துள்ளார் நிவின் பாலி. ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ளது இந்தப் படம். 2014ஆம் ஆண்டு வெளியான ‘உலிடவாரு கண்டந்தே’ என்ற கன்னடப் படத்தின் ரீமேக் இது.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அண்ணாதுரை’. சீனிவாசன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், டயானா சாம்பிகா, மஹிமா, ஜுவல் மேரி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளதோடு, எடிட்டிங்கும் செய்துள்ளார். ஃபாத்திமா விஜய் ஆண்டனி மற்றும் ராதிகா சரத்குமார் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

Tamil Cinema Aruvi Movie Annadurai Movie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment